/tamil-ie/media/media_files/uploads/2018/01/bharathi-raja.jpg)
இயக்குனர் பாரதிராஜா
மரணம்கொடுமையானது. அதிலும்அகாலமரணங்கள்மிகக்கொடுமையானது. அப்படியொருநிகழ்வைசந்திக்கும்போதுசொந்தபந்தங்கள். உடன்நட்புகள்கலங்கிப்போகும். செய்வதறியாதுதிகைத்துப்போகும். அந்நேரம்ஆறுதல்சொல்லுதலேஇயலாதகாரியம். தேற்றுவதற்குவார்த்தைகள்இருக்காது. உடன்நிற்பதுமட்டுமேசாத்தியமாகும்.
அந்நேரத்தைக்கூடநம்மால்தரமுடியாதநிலைக்குத்தள்ளிவிடுகின்றனசமீபகாலமீடியாக்களின்செயல். புகழ்பெற்றவர்களின்வீட்டுஇழப்பைஇவர்கள்படம்எடுத்துப்போடுவதால்தேவையற்றகூட்டம்சேர்கிறது.வந்துஉடன்நிற்கநினைக்கும்பலரைதுக்கவீட்டிற்கேவரவிடாமல்செய்துவிடுகிறது. அல்லதுவந்ததும்ஓடவைத்துவிடுகிறது.முன்பெல்லாம்ஊடகதர்மம்இருந்தது. எந்நிகழ்வைபடமாக்கவேண்டும். கூடாதென்று.
இப்போதுசமூகவலைதளங்கள்பெருகியபின்எல்லாமேமாறிவிட்டது. அறநிலைபிறழ்ந்துவிட்டதுஊடகங்கள். மரணவீட்டின்உள்ளேவரைநுழைந்துகாட்சித்திருடுவதைசெய்கின்றன. நம்அனுமதிஇல்லாமல்இரக்கமற்றுநம்கையறுநிலையில்நிற்கும்முகங்களைபடம்பிடித்துக்காட்டுகின்றனர். இதுஎந்தவிதத்தில்நியாயம்எனத்தெரியவில்லை.
சினிமாக்காரர்களின்வீடுஎன்னதிறந்தமடமா?? அவர்களின்துக்கம்கேலிச்சித்திரமா?நேற்றும்..இதற்குமுன்நிகழ்ந்தமரணநிகழ்விலும்மீடியாக்கள்நடந்துகொண்டவிதம்கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள்போர்வையில்வருபவர்களையும்அடையாளங்கண்டுகளையவேண்டியநேரம்இது. குடும்பஉறவுகளாகமதிக்கும்மீடியாவினரின்இதுபோன்றநாகரீகமற்றசெயல்கள்வேறுபடுத்திப்பார்க்கவைக்கின்றன.
இவர்களுக்கும்நம்இழப்பிற்கும்சம்பந்தமேஇல்லையோஎனஎண்ணவைக்கிறது. இதுபோன்றநிகழ்வுகள்மனச்சங்கடத்தைஉருவாக்கியுள்ளது. ஊடகதர்மத்தைமீறிநடந்துகொள்வதால்... காணொளிசெய்பவர்களைமரணவீட்டில்மறுக்கவேண்டியவிதிமுறைகளைஉருவாக்கவேண்டியகட்டாயம்ஏற்பட்டுள்ளது.அதற்கானசெயல்பாடுகளைத்தீவிரப்படுத்துவதுதயாரிப்பாளர்கள்... மற்றும்சினிமாசார்ந்தஅனைவரின்முக்கியகடமையாகும்.அப்போதுதான்நம்வீட்டுநிகழ்வுகளில்அநாகரீகங்கள்தடுக்கப்படும்.
ஒருமூத்தகலைஞனாகவும், தமிழ்த்திரைப்படநடப்புதயாரிப்பாளர்கள்சங்கத்தின்தலைவர்என்றமுறையிலும்ஊடகத்தினரின்செயல்பாடுகளைவன்மையாகக்கண்டிக்கிறேன். காவல்துறையும்சம்பந்தப்பட்டவர்களின்அனுமதிஇல்லாமல்மீடியாக்களைஅனுமதிக்கவேண்டாம்என்றகோரிக்கையைமுன்வைக்கிறேன் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.