திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் முக்கியமான மாவட்டம் கடலூர். இங்கிருந்து பக்கத்தில் இருக்கும் யூனியன் பிரதேசமாக பாண்டிச்சேரிக்கு பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளை ஏற்றிச்செல்வதில், தனியார் பேருந்துகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இங்கு செயல்பாட்டில் இருக்கும் பல பேருந்களில் தடை செய்யப்பட்ட ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, இயக்குனர் சேரன் பயணித்த கார் பின்னால் இருந்து தடை செய்யப்பட்ட ஹாரனை அதிக சத்தத்துடன் ஒலிக்க செய்துகொண்டே வந்துள்ளனர். இதனால் கோபமான இயக்குனர் சேரன், பெரியகங்கனாகுப்பம் பகுதியில் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, அதிக சத்ததுடன் தடை செய்யப்பட்ட ஹாரனை பயன்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மற்ற பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள் என பலரும் அந்த பகுதியில் குவிந்தனர். இந்த தனியார் பேருந்து ஓட்டுனர்களை தட்டிக்கேட்ட, இயக்குனர் சேரனுக்கு அங்கிருந்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன், சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது எல்லை மீறி ஹாரன் ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுனரை தட்டிக்கேட்ட சமம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“