தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். 1993ம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2, தெலுங்கு நடிகர் ராம்சரன் நடிப்பில் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.
ஷங்கர் இயக்கும் படங்கள் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்றது. இவரது படங்களில் உலகின் பல இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக பாடல் காட்சிகளில் வித்தியாகமான காட்சிகளை படமாக்கியிருப்பார். ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடலில் உலகத்தின் 7 அதிசயங்களையும் காட்டிருப்பார். அதேபோல் பாய்ஸ் படத்தில் தேவையில்லாத வேஸ்ட் பொருட்களை மட்டும் வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருப்பார்.
இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் ஷங்கர் அதே ஜீன்ஸ் படத்தின் ஒரு பாடலில் ரோபோ நடனம் ஆடுவது போல் செய்திருப்பார். இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு மட்டும் எப்படி இப்படி தோன்றுகிறது என்று யோசித்தவர்களும் அதிகம்.நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் இது குறித்து கேள்வி கேட்டப்பட்டது.
இதில் பேசிய, வெளிநாடு இடங்களில் பாடல்காட்சி படமாக்குவது, யாரும் அதிகம் நெருங்காத இடங்களில் படமாக்குவது இந்த ஐடியா எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷங்கர், தயாரிப்பாளர் பணத்தில் எப்படியாவது வெளிநாட்டை சுற்றி பார்த்துவிட வேண்டும் என்று இதை செய்யவில்லை. இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலா ப்ளூக்ளிராஸ் மெம்பர். உயிரினங்களை விரும்புவர். அதனால் டெலிபோன் மணிபோல் பாடலை வெறும் மிருகங்கள் மட்டுமே வைத்து காட்சிபடுத்தவே ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன்.
ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான் பாடலை அதிகமான பீடஸ்சுடன் கொடுத்துவிட்டார். அந்த பீட்ஸ்க்கு வெறும் பிராணிகளை மட்டும் காட்சிப்படுத்தினால் செட் ஆகாது. டான்ஸ் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் பிராணிகள் மற்றும் டானஸ் இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்தோம்.. முடிந்த வரைக்கும் கதைக்கு உண்மையாக எந்த மாதிரியான இடங்களில் படமாக்க வேண்டும் என்று நினைத்துதான் படமாக்குகிறோம். ஆனால் முதல்வன் படத்தில் வெளிநாடு செல்வது போன்ற கதை இல்லை.
அதனால் படத்தின் க்ளைமேக்ஸ் பாடலை தேனியில் வைத்து படமாக்கினோம். பாடலுக்காக வெளிநாடு போய்விட வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை கதைக்கு தேவை என்றால் மட்டுமே அதை செய்வேன். வெளிநாடுகளில் நாம் பார்க்காத இடம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது அதை பார்த்துவிடலாம் என்று நினைத்து எதையும் செய்வதில்லை. முதல்வன் படத்தில் தேன்மொழியை பார்க்க புகழேந்தி கிராமத்திற்கு வருகிறார். அதனால் அந்த பாடல் காட்சியை கிராமத்தில் தான் எடுக்க வேண்டும். அதேபோல் கிராமத்தில் இருவருக்கும் ஒரு காஸ்யூம் கொடுத்து படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil