/indian-express-tamil/media/media_files/2025/09/15/tamil-cinema-simrab-2025-09-15-11-50-48.jpg)
சிம்ரன் 2 வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த கதை எனக்கு சரியாக ஒட்டவில்லை என்று சொன்ன ஒரு இயக்குனர், அந்த படத்தின் மூலமாகவே இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இது குறித்து அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என வலம் வரும் வ.கெளதமன், தான் இயக்கிய மகிழ்ச்சி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் ஓராளவு வரவேற்பை பெற்றிருந்தது. 2010-ம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில், 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில், வெளியான முழுநீள காமெடி படம் தான் நானே ராஜா நானே மந்திரி. இந்த படத்தின் இயக்குனர் பாலு ஆனந்த், பின்னாளில், பல வெற்றிப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். உன்னை நினைத்து படத்தில் சூர்யாவலின் லாட்ஜ்க்கு மேனேஜராக வரும் பாலு ஆனந்த் இயக்கிய ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் வா.கௌதமன். அதன்பிறகு இ.ராமதாஸ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரித்த வான்மதி, காதல் கோட்டை படம் வெளியாகி வெற்றியை பெறுகிறது, அடுத்து காலமெல்லாம் காதல் வாழ்க படம் தயாரிப்பில் இருக்கிறது. ஆனால் வான்மதி படம் தயாரிப்பில் இருக்கும்போதே சிவசக்தி பாண்டியன் கௌதமினிடம் கதை கேட்க, அவர் பூலித்தேன் என்ற ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்து போக கண்டிப்பாக பண்ணலாம் என்று சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்து படத்தை தயாரித்த அவர் கௌதமனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
அதே சமயம் இந்த பூலித்தேவன் கதை பிரஷாந்த் – மனிஷா கொய்லாலா நடிப்பில், தியாகராஜனே இயக்குவராகவும் அதன்பிறகு, அவர் கௌதமனை இயக்குனராக அறிமுகப்படுத்த முயற்சியும் செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போனதால் இந்த கதை சிவசக்தி பாண்டியனிடம் வந்துள்ளது. ஆனால் அதன்பிறகு ஒருநாள் சிவசக்தி பாண்டியனிடம், தங்கர் பச்சன் ஒரு நாவல் ஆசிரியரை அழைத்து வந்தது கதை சொல்லுமாறு கூறியுள்ளார். அவர் சொன்ன கதை அனைவருக்கும் பிடித்துள்ளது, தங்கர் பச்சன், லெனின் ஆகியோர் தங்களை இயக்குனராக போடுங்க என்று கேட்டுள்ளனர்.
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், கௌதமனை அந்த கதையை கேட்குமாறு கூறியுள்ளார். கதையை கேட்ட கௌதமன் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல, இவ்ளோ பேர் கேட்குறாங்க, உன்னை இயக்குனராக ஆக்கலாம் என்று சொல்லி கேட்க சொன்னால் பிடிக்கலனு சொல்ற, இப்போ என்ன பண்றது, இந்த கதை தாங்காது சார், சிம்ரன் 2 கேரக்டர், உடன்பிறகு இல்லனு சொல்றீங்க, வெவ்வேறு என்று சொன்னாலும் கதைக்கு ஒட்டவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று சொன்ன கதையை தான் இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
அந்த படம் கனவே கலையாதே திரைப்படம். முரளி நாயகனாக நடித்த இந்த படத்தில் சிம்ரன் 2 கேரக்டரில் நடித்திருப்பார். சின்னி ஜெயந்த், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், முரளியை காதலித்த சிம்ரன் இறந்துவிட, 2-வது சிம்ரன் காதலை முரளி சேர்த்து வைப்பது தான் கதை. இந்த தகவலை வ.கௌதமனே சாய் வித் சித்ரா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us