நேர்மை இல்லாத சூர்யா அறிக்கை; அந்த போலீஸ்காரர் இந்த சமூகம் தான்; ஜெய்பீம் குறித்து வி.கௌதமன் பேச்சு

15 வருடங்களுக்கு பிறகு, படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கிய நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

15 வருடங்களுக்கு பிறகு, படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கிய நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
jai bhim and Gowthaman

ஜெய்பீம் கதை உண்மையில், அந்த போலீஸ்காரர் வேறு சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் படத்தில், அவரை குரு என்று பெயர் வைத்து, அக்னி குண்டத்தை காட்டி பிரச்னையை பெரிதாக்கிவிட்டார்கள். சூர்யா இது குறித்து வெளியிட்டது நேர்மை இல்லாத அறிக்கை என்று இயக்குனர் கௌதமன் கூறியுள்ளார்.

Advertisment

1999-ம் ஆண்டு முரளி, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் கனவே கலையாதே. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வி.கௌதமன், அடுத்து மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கிய நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 2010-ம் ஆண்டு வெளியான நிலையில், 15 வருடங்களுக்கு பிறகு, படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கிய நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. மறைந்த அரசியல் தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது இந்த படம்.

படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். பொதுவுடைமை பேசும் சமுத்திக்கனி முதல்முறையாக ஒரு சாதிப்படத்தில் நடித்துள்ளார் என்ற பேச்சு சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் ப்ரமோஷன் பணிக்காக இயக்குனரும் நடிகருமான கௌதமன், பல யூடியூப் சேனல்களில் அமர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெய்பீம் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

காடுவெட்டி குரு குறித்து வெளியான தகவல்களால், எனக்கு வந்த கோபம் தான் இந்த படம் உருவாக ஒரு காரணமாக இருந்தது. மக்களை மோதவிட்டுக்கொண்டு, இந்த மொழிக்கும் இனத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கூட்டம் ஆண்டுகொண்டு இருக்கிறது, அந்த சமயத்தில் ஜெய்பீம் என்ற ஒரு படம வருகிறது. அற்புதமாக படம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த படத்தின் உண்மை கதையில், அந்த காவல்துறை அதிகாரி, முதலியார் சமூகத்தில் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர். அவரது பெயர் ஆரோக்கிய சாமி. ஆனால் அவரது பெயரை படத்தில் குரு என்று மாற்றியுள்ளனர்.

Advertisment
Advertisements

அந்த கொடூரமான ஒருவரை அடித்தே கொன்ற காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு குரு என்று பெயர் வைத்து அக்னி குண்டத்தை மாட்டி, படம் முழுவதும் சாதி வெறியில் தான் அடித்து கொன்றுவிட்டான் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் தப்பான பிம்பத்தை ஏற்படுத்தி ஒரு சமூகத்தை குறித்து மோசமான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். எங்கள சமூகத்தினர் இதற்காக படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியும், திமிராக அறிக்கை விட்டனர். 
இது தொடர்பான சூர்யாவும் அறிக்கை விடுகிறார். இந்த அறிக்கைகள் நேர்மையற்றதாகவே இருந்தது.

இது குறித்து சிவக்குமார் சாரிடம் குறிப்புகள் கொடுத்து எதிர்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ராமதாஸ் அய்யாவிடம் நான் பேசுகிறேன். இருவரும் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். ஆனால் மழைக்காலம் என்பதால் ராமதாஸ் வர வேண்டாம் போனில் பேசினால் போதும் என்று சொன்னார். ஆனால் ஞானவேல் சூர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தப்படுவதாக சொன்னார் இது நேர்மையில்லாத ஒரு அறிக்கை என்று கௌதமன் கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: