ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் புள்ளிகள்; முக்கிய காரணம் இதுதான்: உண்மை உடைத்த கோபி நயினார்!

அந்த காலத்தில் பாரதிராஜா படங்களை பார்த்தால், அதில் அவர் வாழந்த நிலம், சந்தித்த மனதிர்கள், அவர்ளுக்கு இடையிலான பேச்சு, விழாக்கள், அந்த மக்களின் பாடல்கள் எல்லாமே இருக்கிறது.

அந்த காலத்தில் பாரதிராஜா படங்களை பார்த்தால், அதில் அவர் வாழந்த நிலம், சந்தித்த மனதிர்கள், அவர்ளுக்கு இடையிலான பேச்சு, விழாக்கள், அந்த மக்களின் பாடல்கள் எல்லாமே இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Right

சமீபத்தில் ஐ.டி. இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதை ஆணவக்கொலை என்று கூறி வருகின்றனர். இதனிடையே, இதுபோன்ற கொலைகளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார்.

Advertisment

நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி நயினார், அதன்பிறகு ஓரிரு படங்களை இயக்கினார். ஆனால் படங்கள் வெளியாகவில்லை. சினிமா மட்டுமல்லாமல், அடக்குமுறை, சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து அவ்வப்போது குரல்கொடுத்து வரும் கோபி நயினார், தற்போது ஆணவக்கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சிகளை பெற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், படம் எழுப்பதால் தான் சாதி வருகிறது என்று சொல்கிறார். முதலில் நீங்கள் என்னாவாக வாழ்ந்தீர்கள், இப்போது வாழ்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சாதிய கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை தான் வலியுறுத்துகிறோம். நோயாளியை கண்டுபிடித்து அவனுக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அதற்கான மருந்துதான் இல்லை.

சாதிய கட்டமைப்புகளை உடைக்க, ஏதாவது வழி இருக்கிறதா என்றால் இல்லை. பெரியார், அம்பேத்கர் வாழ்ந்த காலக்கட்டங்களில் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்துவிட்டார்கள். இப்போது அந்த வேலையை அடுத்த கட்டத்தில் எடுத்து செல்ல வேண்டியது பெரியாரிஸ்டுகள் மற்றும் அம்பேத்கரிஸ்டுகள் கையில் தான் உள்ளது. சாதிய கட்டமைப்பு மாறாத வரை, மத கட்டமைப்பு இயங்கிக்கொண்டு தான் இருக்கும். இதை மாற்றத்தான் அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது.

Advertisment
Advertisements

அந்த காலத்தில் பாரதிராஜா படங்களை பார்த்தால், அதில் அவர் வாழந்த நிலம், சந்தித்த மனதிர்கள், அவர்ளுக்கு இடையிலான பேச்சு, விழாக்கள், அந்த மக்களின் பாடல்கள் எல்லாமே இருக்கிறது. இந்த சம்பவங்களுக்கும் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சமூகத்தில் அப்படி ஒரு சிஸ்டம் உருவாகி இருக்கிறது. இங்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அந்த சிஸ்டத்திற்குள் பிறக்கிறது. அதில் இருப்பவர்கள் அந்த குழந்தையை அவர்களின் தேவைக்கேற்ப வளர்த்துக்கொள்கிறார்கள்.

ஆணவக்கொலைகள் எப்படி நடக்கிறது என்றால், ஒரு தலித் பையன் தலித் அல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அடிதடி தகராறு வரும். இந்த தகராறு கொலையிலும் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மொத்த மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சம்பவமாக மாறி இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் சமீபகாலமாக இந்த ஆணவக்கொலைகள் அரசியலாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆணவக்கொலைகளுக்கு பின்னால் ஒரு தோற்ற அல்லது வெற்றி பெற்ற அரசியல்வாதி இருக்கிறார். வெற்றி பெற்றவர் வெற்றியை தக்கவைக்கவும், தோற்ற அரசியல்வாதி மீண்டும் வெற்றியை பெறவும், இதுபோன்ற சம்வபங்களில் தங்கள் இருப்பை வைத்துக்கொள்கிறார்கள். இது மறுக்க முடியாதது என்று கோபி நயினார் கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: