Tamil Cinema Update : ஆல்பம் பாடல் இசை வெளியீட்டு விழாவில் இதை சொன்னால் சர்ச்சையாகிவிடுமோ என்று சொல்லிவிட்டு கிருத்திகா உதயநிதி சொல்லிய கருத்து தற்போது வைரலாக பரவிவருகிறது.
நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடனத்தில் தற்போது இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. பாடகி நக்ஸா சரண் மற்றும் சாண்டி மாஷ்டரின் நடனத்தில் உருவான இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் அரவிந்த் சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய மாஸ்டர் சாண்டி தன்னை யாரும் சிறப்பு விருந்தினராக அழைப்பதில்லை நடன நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே அழைப்பதாக கூறியிருந்தார். மேலும், இந்த பாடலில் நடனமாடியுள்ள பாடகி நக்ஷாவுக்கு நடனம் தெரியாது என்பதால், அவருக்கு ஒரு மாதம் நடன பயிற்சி கொடுத்ததாகவும், யாருக்கும் இவ்வளவு நாட்கள் நடன பயிற்சி கொடுத்ததில்லை என்றும் கூறியானர்
இந்நிலையில், இந்த பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினின் மருமகளும், எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குநர் கிருத்திகா உதயநிதி, பேசும்போது, இந்த விஷயத்தை சொன்னால் சர்ச்சை ஆகிவிடுமா என்று தெரியவிலலை என்று பீடிகை போட்டி பேசிய அவர், சாண்டி மாஸ்டரின் செம போதை பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் இந்த பாடலை இயக்கிற இயக்குநர் கார்த்திக் அடுத்ததாக ஆக்ஷன் படம் இயக்க உள்ளதாகவும், அவர் பார்த்து முறைத்ததும் தான் பயந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். சர்ச்சை ஆகிவிடுமோ என்று கிருத்திகா உதயநிதி பேசிய வார்த்தைகள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil