Advertisment

சரத்குமாருக்கு இன்ஸ்பிரேஷனே அஜித் தான் : கே.எஸ்.ரவிக்குமார் ப்ளாஷ்பேக்

ரஜினிக்கு முத்து படையப்பா, கமலுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம் என தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்

author-image
WebDesk
New Update
Sarath Ravi Ajith

அஜித்குமார் - ரவிக்குமார் - சரத்குமார்

தமிழ் சினிமாவில் சரத்குமார் மற்றும் விஜய் சேதுபதிக்கு இன்ஸ்பிரேஷனே நடிகர் அஜித்தான் என்று நடிகரும் இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். தொடர்ந்து சரத்குமார் முதலில் நாயகனாக நடித்த சேரன் பாண்டியன் படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் அந்த படத்தில் வில்லனாகவும் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்தார்.

அதன்பிறகு சரத்குமார் நடிப்பில், நாட்டாமை என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த ரவிக்குமார், ரஜினிக்கு முத்து படையப்பா, கமலுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம் என தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் விஜய்க்கு மின்சார கண்ணா, அஜித்க்கு வில்லன் வரலாறு, சிம்புவுக்கு சரவணா என முன்னணி நடிகர்கள் பலருக்கும் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இதில் அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்தில் அஜித் பெண் குணங்கள் உள்ளவராக நடித்திருப்பார். அஜித் 3 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் 3 வேடங்களுக்கும் தனித்தனியாக ஸ்கோர் செய்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில்,அஜித்துக்கு பாராட்டுக்களும் குவிந்தது.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், முதலில் இந்த கதைக்கு நடிகர்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அஜித் உடனடியாக நான் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவருக்கும் சில தயக்கங்கள் இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கேட்பார் சார் இந்த கேரக்டரை ஏற்றுக்கொள்வார்களா, கலாய்ப்பார்களாக என்று கேட்பார்.

அதெல்லாம் ஒன்றும் ஆகாது சார் உங்களுக்கு பாராட்டுககள் தான் கிடைக்கும் என்று சொன்னேன். அதேபோல் படம் வெளியான சமயத்தில் அஜித்தின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த படத்தில் முதலில் வில்லன் அஜித் சாவது போலத்தான் கதை எழுதியிருந்தோம். ஆனால் அவன் என்ன தப்பு செய்தான் சார் அவன் அம்மா இப்படி ஆனதுக்கு காரணம் அவனது அப்பா என்பதால் அவன் இப்படி ஆகிவிட்டார்.

தவறு செய்தது அவனது அப்பா தானே அப்படி என்றால் அப்பா தானே சாகவேண்டும் என்று அஜித் சொன்னார். அவர் சொன்னது ஞாயகமாக இருந்தது. அதன்பிறகுதான் படத்தின் க்ளைமேக்ஸில் அப்பா அஜித் சாவது போல் எடுத்தோம். நடிகர்கள் பெண்ணிய குணங்கள் இருப்பது போன்று நடிக்க தயங்கிய அந்த காலக்ட்டத்தில் அஜித் தைரியமாக நடித்தார்.

இன்று காஞ்சனா படத்தில் சரத்குமாரும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியும் பெண்ணி குணங்கள் கலந்த ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இன்ஸ்பிரேஷனே அஜித்குமார் தான். நான் இயக்கிய நாயகர்களில் படப்பிடிப்பில் எதாவது ஷாட் வைத்தால் ஏன் எதுக்கு என்று கேட்காமல் நடிப்பது 2 ஹீரோக்கள் தான் ஒன்று அஜித். மற்றொன்று தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுளளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment