தமிழ் சினிமாவில் வசனத்திற்கு பெயர் பெற்ற முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் லியாகத் அலிகான், தான் ரஜினி படம் இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த்தாகவும், அதற்கு விஜயகாந்த் தான் காரணம் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமக இருந்த விஜயகந்த் - இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணியில் 3-வது நபர் லியாகத் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் வெளியான அன்னை என் தெய்வம் படத்தின் மூலம் திரைக்கதை வசனகர்த்தாவாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்து பலரின் பாராட்டுக்களை பெற்ற தந்த்து. அதன்பிறகு, விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இயக்கனர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
அதே சமயம் இந்த படத்தில் விஜயகாந்த் முதலில் 5 நாட்கள் தான் நடிப்பதாக இருந்தது. இதன் காரணமாக அவர் நடிக்கும் முழுநீள படத்தை இயக்கும் வாய்ப்பு தருவதாக கூறி அந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுமாறு கூறியுள்ளனர். இதற்கு முன்பாக, லியாகத் அலிகானை சந்தித்த இயக்குனர் ராமநாராயணன், விஜயகாந்த் வைத்து படம் இயக்க உங்களிடம் கதை இருக்கிறதா என்று கேட்க, லியாகத் ஒரு கதையை கூறியுள்ளார். இந்த கதை பிடித்துபோக, ராமநாராயணன், தானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த நேரத்தில், இப்ராஹிம் – விஜயகாந்த் இருவரும் நமது தயாரிப்பில் தான் இயக்குனராக அறிமுகமாகவேண்டும் என்ற சொல்ல, அந்த வாய்ப்பை கைநழுவ விட்டுள்ளார் லியாகத். அதன்பிறகு ராமநாராயணன் சொல்லி, ஏ.வி.எம்.நிறவனத்தில் கதை சொன்ன, லியாகத் அலிகான், அந்த படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுத, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்குவதாக ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டு அக்ரிமெண்ட் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்துகொண்ட இப்ராஹிம் விஜயகாந்த் இருவரும் அந்த கதையை நாம பண்ணுவோம் என்றனர்.
அதன்பிறகு லியாகத் அலிகான் ஏ.வி.எம். சென்று அந்த கதையை வங்கிக்கொண்ட வந்துள்ளார். அதே கதையில் விஜயகாந்த் நடிக்க இயக்குனர் அமீர்ஜான் இயக்கியுள்ளர். அதே நேரத்தில் பூந்தோட்ட காவல்காரன் படமும் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. லியாகத் அலிகான் கதை எழுதிய உழைத்து வாழ வேண்டும் படம் தோல்வியை சந்திக்க, அவர் திரைக்கதை வசனம் எழுதிய பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம பெரிய வெற்றிப்படமக அமைந்தது.
அதன்பிறகு விஜயகாந்த் நடித்த பாட்டுக்கு ஒரு தலைவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லியாகத் அலிகான், ராதிகாவை வைத்து ராணி மகாராணி என்ற படத்தை இயக்கிய தயாரித்தார். ஆனால் அந்த படத்தை வெளியிட முடியாமல் தத்தளித்தபோது நள்ளிரவில் ரூ6 லட்சம் படத்திற்காக நடிகர் சரத்குமார் அவருக்க உதவி செய்துள்ளார். அதன்பிறகு சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்திற்கு வசனம் எழுதி அந்த கடனை அடைத்துள்ளார் லியாகத் அலிகான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.