பேட்டராப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, இப்போது எனக்கு இந்தி தெரியாது. அதை கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலையாக உள்ளது என்று நகைச்சுவையுடன் பேசியுள்ளார். இதற்கு காரணம் ஒரு நடிகை.
எஸ்.ஜே.சின்னு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா இணைந்து நடித்துள்ள படம் பேட்ட ராப். இசையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியான கோட் படத்தில் பிரபு தேவா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், பிரபுதேவா தனது அடுத்த படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் வரும் பேட்ட ராப் பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வார்த்தையையே தனது படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ள பிரபுதேவா, தற்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை சன்னி லியோனுடன், பல்வேறு இடங்களில் ப்ரமோஷன் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் பேட்டராப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
விழாவில் பேசிய அவர், 2-3 வருத்திற்கு முன்பு இந்தி தெரியாது போடா என்று சொல்வார்கள் அதை கேட்கும்போது சந்தோஷமாக இருந்துது. அதன்பிறகு, இந்தி தெரியாது போடா என்று டிசர்ட் போட்டார்கள். அதை பார்க்கும்போதும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தி தெரியாதது கவலையாக போச்சு. சன்னி லியோன் அருக்கில் இருக்கிறார். அவரிடம் 2 வார்த்தை இந்தியில் பேச முயவில்லை. இதற்காகவே இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“