/indian-express-tamil/media/media_files/2025/04/18/xpoN4hOOuvM0h8q1lTem.jpg)
வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ கடந்த சில நாட்களாக, தனது சமூகவலைதளங்களில் வெளியிடும் வீடியோக்களால், அவருக்கு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பி வரும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம் நடராஜன்). அடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
2024-ம் ஆண்டு இறுகப்பற்று என்ற படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். ஸ்ரீ, தேர்வு செய்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் தான் என்றாலும், அவர் அதிகமான படங்கள் கமிட் ஆகவில்லை. சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபகாலமாக உடல் மெலிந்த நிலையில், அரைநிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீ வெளியிட்டு வந்தார். இதனால் சமூகவலைளதங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இவருக்கு என்ன ஆச்சு, என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். மேலும் திரைத்துறையில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் மற்றுமு் தயாரிப்பாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூற தொடங்கினர்.
இதனிடையே, நடிகர் ஸ்ரீ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ தற்போது மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் உள்ளார், மேலும் முறையான சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி, ஸ்ரீ அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகியுள்ளார். அவரது தனியுரிமைக்கான தேவையை மதித்து, குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் கவனம் செலுத்த இடம் அளிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025
லோகேஷ் கனகராஜூவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் அவரது பதிவுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.