Advertisment

போஸ்டரில் இணைந்த லோகேஷ் - ஸ்ருதிஹாசன் : கமல் நிறுவனம் புதிய பதிவு : காரணம் இதுதானா?

தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தின் திரைக்கதை பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Lokesh Shruti Haasan

லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லியோ படத்திற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க உள்ள நிலையில், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் திரைக்கதை பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே நடிகர் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், "இனிமேல் டெலுலு என்பது நியூ சொலுலு என்று பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர்.

இருப்பினும், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசனின் புதிய போஸ்டர் அவர்களின் புதிய இசை வீடியோவைப் பற்றியது. லோகேஷ் இயக்கிய இந்த வீடியோ காதலர் தின சிறப்பு இசை வீடியோ என்று கூறப்படுகிறது. போஸ்டர் மூலம் சில சலசலப்புகளை உருவாக்கியதால் தயாரிப்பாளர்கள் விரைவில் இது குறித்து உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இசை வீடியோ காதலர் தினத்தின் போது வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகையாக தனது படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், திரைப்படங்களிலும் பாடி வருகிறார், மேலும் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட இதுவரை 30 பாடல்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கடைசியாக 2021 இல் ஒரு இசை வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் லோகேஷ் கனகராஜுடன் தனது இசை வீடியோவுடன் மீண்டும் வர உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment