New Update
/
தனது மனைவி குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள பதில் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது பதிலுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இயக்கியது 5 படங்கள் தான் என்றாலும் கூட இவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் லியோ படத்தை இயக்கிய இவர், அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக தலைவர் 171 என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இடையில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ‘’இனிமேல்’’ என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கமல்ஹாசன் பாடல்கள் எழுதி தயாரித்த இந்த பாடலுக்கு இசையமைத்துள்ள ஸ்ருதிஹாசன் லோகேஷூடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
இந்த ஆல்பம் பாடலின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், லோகேஜ் – ஸ்ருதி இடையேயான ரொமான்ஸ் காட்சி குறித்து ஆதரவும் விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இந்த ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்ட நிலையில், நிகழ்ச்சி முடிந்து லோகேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், இந்த ஆல்பம் பாடலில் நடித்ததற்கு உங்கள் மனைவி என்ன சொன்னார் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க, தொடக்கத்தில் இருந்தே எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை நான் தவிர்த்து வருகிறேன். சினிமாவுக்கு வந்தததில் இருந்து எனக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டும் இருந்தால் போதும் என நினைக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுவெளியில் கொண்டுவர நான் விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.