விக்ரம் படம் வெளியாகும்போது கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்திற்கு வாருங்கள் என்று கூறிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் செய்துவிடாதீர்கள் என்று கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 19-ந் தேதி படம் பிரம்மாண்டாக வெளியாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தின் லியோ படத்திற்கான முன்பதிவு ஏற்று தொடங்கியது.
மேலும் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே லியோ படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார்.
இந்த பேட்டிகளில் அவர் சொல்லும் தகவல்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் படத்தின் முதல் பத்து நிமிடங்களைத் தவறவிடாதீர்கள் என்று பார்வையாளர்களைக் கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ள லோகேஷ், அந்த பத்து நிமிடங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமா அனுபவத்தை கொடுக்க கடந்த ஒரு வருடமாக தங்கள் குழு கடுமையாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள லியோ படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ படத்தின் முன்பதிவு இந்தியாவில் முழு அளவில் தொடங்கவில்லை, என்றாலும் கூட ஏற்கனவே புக் மை ஷோவில் படம் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது. தமிழகத்தில் ஒரு சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளததால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“