Advertisment

ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பென்சில். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்த இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisment

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பென்சில். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்த இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடித்த இந்த படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் அடுத்ததாக வாசுவின் கர்பிணிகள் என்ற படத்தை இயக்கி வந்தார். நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா போன்ற பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.

இந்நேரத்தில் இயக்குநர் மணி நாகராஜ் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இது தொடர்பான வாசுவின் கர்பிணிகள் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அன்புடையீர்,

வாசுவின் கர்ப்பிணிகள் குழு, கனத்த இதயத்துடன் எங்கள் இயக்குனர் திரு. மணி நாகராஜ் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்இ

மதுரையை சேர்ந்த 45 வயதான இயக்குனர் மணிராஜ், திரைக்கல்லூரியில் படித்துள்ளார். பென்சில் படத்தினை இயக்கிய அவர், இதற்கு முன்பாக கவுதம் மேனனுடன் 'காக்க காக்க ' முதல் ' விண்ணைத்தாண்டி வருவாயா ' வரை பணியாற்றியுள்ளார்.

அவரது ஆன்மா  சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்! அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எங்களது  பிரார்த்தனைகள். தங்களின் இழப்பால் வாடும்! இறுதி சடங்கானது  நாளை AVM இடுகாட்டில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment