ஏமாற்றிய 'தக் லைஃப்': மணிரத்னம் மன்னிப்பு கேட்டாரா?; மெட்ராஸ் டாக்கீஸ் விளக்கம்!

'தக் லைஃப்' படத்திற்கும் 'நாயகன்' அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவுகூரும் ரசிகர்கள், எதிர்பார்த்தனர்.

'தக் லைஃப்' படத்திற்கும் 'நாயகன்' அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவுகூரும் ரசிகர்கள், எதிர்பார்த்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thug Life and Kamal

கமல்ஹாசன் - மணிரத்னம்

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life). பான்-இந்திய படமாக கடந்த ஜூன் 5-ந் தேதி வெளியான இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது, மணிரத்னம் கமல் கூட்டணியில் ஏற்கனவே உருவான 'நாயகன்' திரைப்படம், இன்றும் ஒரு கிளாசிக் படைப்பாக கொண்டாடப்படுகிறது.

Advertisment

இதன் காரணமாக 'தக் லைஃப்' படத்திற்கும் 'நாயகன்' அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவுகூரும் ரசிகர்கள், இந்த இணையின் மூலம் மற்றொரு மகத்தான கிளாசிக் படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, 'தக் லைஃப்' திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்திற்கு, விமர்சகர்களும் ரசிகர்களும் எதிர்மறையான விமர்சனங்களையே வழங்கினர்.

கதைக்களமும், அதன் வடிவமைப்பும் திறனற்றவையாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் போன்ற பெரும் நட்சத்திரங்கள் இணைந்த இந்தப் படத்திற்குத் தேவையான ஆழமும், தாக்கமும் இல்லை என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்து, திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாத நிலையில், இயக்குனர் மணிரத்னம் படத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாயகன் போன்ற ஒரு படத்தைப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க நினைத்தோம். ஆனால் ரசிகர்கள் வேறு எதையோ எதிர்பார்த்தனர். அது ஒரு தவறான புரிதலாகிவிட்டது," என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

ரசிகர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மணிரத்னம் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், ஒரு மிகப்பெரிய தோல்விப் படத்திற்குப் பிறகும், ஒரு ஹிட் படத்துடன் திரும்பி வருவதில் கைதேர்ந்தவர். 'தக் லைஃப்' தோல்வியை ஒரு புறம் வைத்துவிட்டு, அவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையில் மும்முரமாக இருக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் எதிர்காலத்தில் மீண்டும் இணைந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அற்புதமான படைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால், இந்தப் படம் 2 வாரங்களில் ரூ60 கோடிக்கும் குறைவாகவே வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனிடையே மணிரத்னம் தக் லைப் படத்தின் தோல்விக்காக மன்னிப்பு கோரியதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவ தொடங்கிய நிலையில், ரசிகர்களும் அவருக்கு அடுத்த படம் சிறப்பாக பண்ண வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வரும் தகவல் வதந்தி என்று அவரின் மெட்ராஜ் டாக்கீஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனால் உண்மை என்ன என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

Maniratnam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: