Advertisment

குடிப்பழக்கம் அல்ல... அண்ணன் மரணத்திற்கு காரணம் இதுதான் : மனம் திறந்த மணிவண்ணன் தங்கை

படிப்பை பாதியில் நிறுத்திய மணிவண்ணன் அந்த காலக்கட்டத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்து அவருக்கு சுமார் 100 பக்கத்தில் ஒரு கடிததத்தை எழுதியுள்ளார்.

author-image
WebDesk
Nov 15, 2023 20:37 IST
New Update
Manivana Sister.

இயக்குனர் மணிவண்ணன் தங்கை

தமிழ் சினிமாவில் பல தனித்துவமாக படங்களை இயக்கி வெற்றி கண்ட மணிவண்ணன் ஒரு நடிகராகவும் தனது தனித்தவத்தை நிரூபித்தவர். தற்போது அவர் இறந்து 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில். அவர் இறப்புக்கான காரணம் குறித்து அவரது தங்கை மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரை சேந்த மணிவண்ணன், அதே கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் பயின்றுள்ளார். பள்ளிப்படிப்பை தமிழில் முடித்த மணிவண்ணன், கல்லூரியில் ஆங்கிலத்தை தனது முதன்மை பாடமாக எடுத்து படித்துள்ளார். ஆனால் கல்லூரியில் ஷேக்ஸ் பியர் நாடகத்தில் நடித்தபோது இவரின் உச்சரிப்பு காரணமாக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதன் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மணிவண்ணன். அந்த காலக்கட்டத்தில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்து அவருக்கு சுமார் 100 பக்கத்தில் ஒரு கடிததத்தை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பார்த்து வியந்த பாரதிராஜா அவரை தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து 1980-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய மணிவண்ணன், 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

மோகன் ராதா சுஹாசினி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, இளமை காலங்கள், 100-வது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த மணிவண்ணன் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான அமைதிப்படை திரைப்படம் இன்றும் அரசியல் சார்ந்த படங்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனராக மட்டுமல்லாமல், வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் என நடிகராகவும் கலக்கிய மணிவண்ணன் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தார். அதிகமான குடிக்கபழக்கம் காரணமாக அவர் உயிரிழந்ததாக அப்போது தகவல் வெளியான நிலையில், தற்போது எனது அண்ணன் குடிப்பழக்கத்தினால் உயிரிழந்ததாக கூறுவது பொய்யானது என்று அவரது தங்கை 10 வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறியுள்ளார்.

பிகைண்ட்வுடஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு என் அண்ணன் அப்பா அண்ணி அம்மா மாதிரி தான் என்னை பார்த்துக்கொண்டார்கள். என்னை மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டார்கள். அவர் கோவிலக்கு போகமாட்டார் என்றாலும் எனக்காக வருவார். பிரசாதம் வாங்கிட்டு வாங்க நான் வந்திருக்கேனு சொல்ல எக்ஸ்ராவா வாங்கிட்டு வாங்க என்று சொல்வார். அவர் இல்லாமல் இந்த 10 வருடம் எப்படி போனது என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன்.

அண்ணிக்கு 2004-ல் கேன்சர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு சிகிச்சை அளித்தும் 10 வருடங்கள் தோடு அவர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் தனது கடைசி கட்டத்தில் இருக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவார் என்று டாக்டர்கள் அண்ணாவிடம் மட்டும் சொல்லியிருக்கிறார்கள். அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் அவர் லிவர் ப்ராபளம் வந்த உடனே குடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் குடியால் இற்ந்துவிட்டார் என்பது பொய்யான தகவல்.

அண்ணி இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்து பார்க்க முடியாவில்ல. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு கூட சேரில் இருந்து விழுந்துவிட்டார். அப்போது அவரது உடலை அனைத்து செக் செய்து பார்த்தோம் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. திடீரென அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. அவர் இறந்த 2 மாதங்களில் அண்ணியும் இழந்துவிட்டார். அந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இருவருமை் இருந்தார்கள் ஆனால் திருமணத்தின்போது இல்லை என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment