மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் விஜய்க்கு கதை கூறியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இயக்குனரா ராமிடம் உதவியாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், முதல் படத்திலேயே அனைவரும் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். சாதிய அடக்குமுறையால் ஒரு சமூதாயம் படும் துயத்தை தனது பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் த்ரூபமாக காட்டிய மாரி செல்வராஜ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அதன்பிறகு அவரது 2-வது படமாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளம் கிராமத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறையால் ஒரு கிராமமே சூரையாடப்பட்ட சம்பவத்தை கண்முன் நிறுத்தியிருப்பார். கலைப்புலி தானு தயாரித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பரியேறும் பெருமாள் அளவுக்கு அழுத்தம் இல்லை என்றும் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனது 3-வது படமாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை தொடங்கினார். வடிவேலு, பகத் பாசில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயரான இந்த படம் இன்று வெளியாகியுள்ளது, மேலும் இந்த படம் உதயநிதியின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தை பார்த்த பலரும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் நடிகர் விஜயிடம் கதை சொல்லியதாக தெரிவித்துள்ளார். விஜயின் தீவிர ரசிகரான நான் திரையில் அவரை பார்த்து ரசித்த எனக்கு அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் என் பாணியில் ஒரு கதையை அவரிடம் சொன்னேன். அவர் அதை கேட்டு ஷாக் ஆகிவிட்டார். இருந்தாலும் நாங்கள் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“