Advertisment

ஜெயிலர் 2 படத்தை இயக்குகிறாரா நெல்சன்? அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட்!

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

author-image
WebDesk
New Update
Jailer

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தின் 2-ம் பாகம் எப்போது வரும் என்பது குறித்து இயக்குனர் நெல்சன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வசூல் சாதனை படைத்த படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், விநாயகன் வில்லனாக கலக்கியிருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பின்னணி இசை என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் வெற்றியை தொடந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக நடிகை மிர்னா மேனன் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது அடுத்த படம் 'ஜெயிலர் 2' என்பது உறுதியாக தெரியவில்லை என நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளா.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  இதனிடையே 'ஜெயிலர்' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், துஷ்ரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 75% நிறைவடைந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது அடுத்த 'தலைவர் 171' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment