/tamil-ie/media/media_files/uploads/2022/05/Iravin-Nizhal-Parthiban.jpg)
Tamil Cinema Director Parthiban Angry : இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து கநடந்த 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். தொடர்ந்து உள்ளே வெளியே வாய்மையே வெல்லும், கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக இவர் இயக்கிய ஒத்த செருப்பு படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று நல்ல விமர்சனர்களை பெற்று தந்தது. மேலும் 2 தேசிய விருதுகளை பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பார்த்திபன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவின் நிழல் என்ற படத்தை தொடங்கினார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்க உள்ளதாகவும், இந்த கதைக்கு மற்ற நடிகர்களை அழைத்தபோது பலரும் நடிக்க யோசித்த நிலையில், தன்னை நம்பி வந்த சிலரை மட்டும் வைத்துக்கொண்டு இந்த படத்தை முடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு வி0ழா நேற்று சென்னையில் நடைபெற்து. இதில் பார்த்திபனுடன் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டார். இதில் சுவாரஸ்ய நிகழ்வாக பார்த்திபன் ரஹ்மான் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உரையாடலின்போது, பார்த்திபனின் மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூங்கி மேடைக்கு கீழே எறந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய பார்த்திபன், தான் உணர்ச்சிவசப்பட்டதாகவும், இந்த செயலுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனாலும், பார்த்திபனின் இந்த செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.