Advertisment
Presenting Partner
Desktop GIF

பருத்தி வீரன் சர்ச்சை... எதற்கும் ஒரு வரைமுறை இருக்கணும் : பொண்வண்ணன் எச்சரிக்கை

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல

author-image
WebDesk
New Update
Ameer Ponvannan Gnana

பொண்வண்ணன் - அமீர் - ஞானவேல் ராஜா

பருத்தி வீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பல குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகரும் இயக்குனருமான பொண்வண்ணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2007-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படமாக மாறிவிட்டது. இந்த படத்திற்கு முதற்கட்ட படப்பிடிப்புக்கு பணம் கொடுத்து உதவிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதன்பிறகு படத்தை பற்றி கண்டுகொள்ளவில்லை. இறுதியில் அமீர் பலரிடம் கடன் வாங்கி படத்தை முடித்தபின் இது தன் படம் என்று வாங்கி வெளியிட்டுள்ளார்.

வெளியீட்டுக்கு முன்பாக படத்திற்கு இயக்குனர் அமீர் செய்த செலவுக்கான தொகை அவருக்கு திருப்ப கொடுக்கப்பட வில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் அமீர் பொய் கணக்கு எழுதி பணத்தை எடுத்துவிட்டார். அவர் செலவுகளுக்கு சரியான கணக்கு காட்டவில்லை. அவருக்கு படம் எடுக்க தெரியாது என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்  இந்த கருத்து இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், பருத்தி வீரன் படத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்லாமல் வெளியில் சில தயாரிப்பாளர்களும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள நடிகரும் இயக்குனருமான பொண்வண்ணன்,

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டறையில் முரட்டுக்குத்துதிரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ!

வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.. பிரியமுடன் பொண்வண்ணன் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ameer Sultan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment