ஒரு தந்தையிடம் மகன் இப்படித்தான் ஆணவமாக நடந்துகொள்வாரா என்று நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சரத்குமார், ஷாம், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கல் தினத்தில் வெளியான வாரிசு படம் சற்று சறுக்கலை சந்தித்து.
விஜய் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட கதையம்சம் கொண்ட படத்தில் நடித்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாரிசு படம் தவறிவிட்டது. ஆனாலும் படம் வசூலில் சாதனை படைத்ததாக தயாரிக்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசைமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ந் தேதி வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே வாரிசு படம் சறுக்கலை சந்தித்ததால், விஜய் லியோ படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
இதனிடையே வாரிசு படத்தில் இருப்பது போலத்தான் விஜய் நடந்துகொள்வார் என்று இயக்குனர் ராஜகுமாரன் கடுமையாக விமர்சித்துள்ளார். வாரிசு படத்தில் விஜய் தனது அப்பா சரத்குமாரின் பேச்சை கேட்காமல் தனியாக சென்று பிஸினஸ் செய்தாக கூறி வீட்டை விட்டு சென்றுவிடுவார். அதே சமயம் படத்தின் இடைவேளை வரை விஜய் தனது அப்பாவிடம் சற்று கடுமையாகவே நடந்துகொள்வார். தற்போது இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் ராஜகுமாரன் கூறுகையில்,
வாரிசு படத்தில் சரத்குமார் மட்டும் தான் சரியாக நடித்திருந்தார். அவரை தவிர்த்து விஜய் உட்பட வேறு எந்த ஒரு நடிகரும் சரியாக நடிக்கவே இல்லை. ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக நடந்துகொள்வாரா? அதை அவருடைய தந்தையிடம் வைத்துக்கொள்ளட்டும். அதை அவர் திரையில் செய்ய வேண்டாம், ஏனென்றால் அவர் செய்வதை பார்த்துவிட்டு, ரசிகர்கள் அவர்களுடைய தந்தையின் முன் அதே போல் தான் செய்வார்கள் என கூறியுள்ளார்.
லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் விஜய் வாயில் சிகரெட்டுடன் ஆடுவது மது குறித்து பாடல் பாடுவது இன்றைய இளைய தலைமுறையினரை மதுவுக்கும் புகைப்பிடிப்பதற்கும் ஊக்குவிக்கிறார் என்று பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் வாரிசு படம் குறித்து விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“