அனைவரும் சிரிக்கவே இந்த படம்; நான் நினைத்தது நடந்தது: 'பறந்து போ' படம் பற்றி இயக்குனர் கருத்து

இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அதேபோல் பல்வேறு இடங்களில்அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்தது.

இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அதேபோல் பல்வேறு இடங்களில்அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்தது.

author-image
WebDesk
New Update
Siva nh

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் கண்டுகளித்தனர். 

Advertisment

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பார்வையாளர்களிடம் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடி படம் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குநர் ராம் கூறுகையில், இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அதேபோல் பல்வேறு இடங்களில்அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்தது. இந்த படம் குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழும் பெற்றோர்களுக்கு தான்.

All Appas Are Liars குட்டி குட்டி பொய் சொல்ல கூடிய அப்பாக்கள், குடும்பத்திற்காக பர்சில் உள்ள பணத்திற்கு ஏற்ப பொய் சொல்ல கூடிய அப்பாக்கள், அதே சமயம் அப்பாக்கள் எல்லோரும் பாவம் இது குறித்து நான் சிறுவர்களிடம் கேட்ட போது கூட அப்பாக்கள் தான் பொய் கூறுகிறார்கள் அம்மாக்கள் பொய் கூறவில்லை என்றார்கள்.  நா.முத்துக்குமாரை அனைவரும் மிஸ் செய்கிறோம். ஜூலை 19 ம் தேதி நா.முத்துகுமாரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடத்துகிறோம். அந்த விழா அவரின் புகழை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும்.

மலை ஏறினால் மகத்தான விஷயங்கள் கிடைக்கும். நடிகை அஞ்சலி எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர் இந்த படத்திலும் நடித்து உள்ளார்.
 Realistic படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். மக்கள் பிரமாண்டம் என அனைத்தையும் விரும்புவார்கள். மேலும் மக்கள் சுவாரஸ்யம் நிறைந்தது கவலைகளை மறப்பது போன்ற படங்களை ஏற்று கொள்கிறார்கள். உச்சபட்ச நடிகர்கள் அழைத்தால் படம் செய்வேன், ஆர்வம் உள்ளது பாக்ஸ் ஆபீஸ் கண்டிப்பாக வேண்டும்.

Advertisment
Advertisements

ஹாட்ஸ்டார் பணம் கொடுத்தார்கள் நான் எடுத்தேன் என்று கூறிய ராம், நடிகர்கள் போதை பொருட்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. பெற்றோர்கள் அவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குடும்பஸ்தன் பட இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை பார்த்து அனைவரும் மகிழ்ந்தார்கள் என்றும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம். குழந்தைகளை வைத்து எடுக்கின்ற படங்கள் அனைத்தும் ஹாலிவுட்டையும் கலக்குகிறது. படத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக மக்கள் இப்படத்தில் நடித்த சிறுவனை பற்றி பேசுவார்கள் என கூறினார்.

பின்னர் பேசிய எழுத்தாளர் பாமரன் இந்த படத்தில் ராமுக்குள் இருந்த இன்னொரு ராமை பார்த்தேன் என்றார். இப்போதெல்லாம் குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள் ஆனால் 2 கதைகளை கூற குழந்தைக்கு கூறுவதில்லை. இந்த படம் வாழ தவறிய வாழ்க்கை கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி என அனைத்தையும் இந்த படம் உணர்த்தும். மேலும் நடிகர் சிவா என்றாலே காமெடி நடிகன் என்று முத்திரை குத்தப்பட்டிருந்ததை ராம் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: