கும்பாரி என்ற படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்வி உதயகுமார் படததின் நாயகியிடம் முத்தம் கேட்டதாக பேசிய நிகழ்வு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியான உரிமை கீதம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்வி உதயகுமார். தொடர்ந்து புதிய வானம், கிழக்கு வால் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் சின்னகவுண்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது,
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் எஜமான், கமல் நடிப்பில் சிங்காரவேலன், பிரபு நடிப்பில் ராஜகுமாரன், அர்ஜூன் நடிப்பில் சுபாஷ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.வி உதயகுமார், கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது படங்கள் இயக்காமல் பட விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கும்பாரி என்ற படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.வி.உதயகுமார் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என் நான் ஹீரோயின்களுடன் அமர்ந்து வெளு நாட்களாகிவிட்டது. இந்த படத்தில் ஒரு பாடலில் 4 கிஸ் சீன் இருக்கிறது. இதை பார்ப்பதற்கு முன் எனக்கு மிகவும் பசித்தது. ஆனால் காட்சியை பார்க்கும்போது பசி அடங்கி நான் டின்னருக்கு ரெடி ஆகிவிட்டேன்.
அதன்பிறகு மேடை ஏறியவுடனே, முதலில் பாக்யராஜ் சார் பேச அழைக்க சொன்னேன். அவர் பேச சென்றுவிட்டதால் என் பக்கத்தில் ஹீரோயின் உட்கார வேண்டி வந்தது. அப்போது கொஞ்சம் பசி அடங்கிவிட்டது. அடுத்த 2-வதாக என்னை பேச அழைத்தார்கள். இப்போதான் ஹீரோயின் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கு அதுக்குள்ளே என்னை பேச கூப்பிடுறீங்களே கொஞ்ச நேரமாவது சந்தோஷமாக இருக்க விடுங்க.
இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் பயாலஜி கிஸ் கொடுக்கும்போது நன்றாக இருந்தது. முதல்முறை ஓகே. 2-வது முறை எனக்கே கொஞ்சம் சூடாச்சி. 3- மற்றும் 4 வது கிஸ் முடிஞ்சது நான் கடைசியா பேசிக்கிறேன் பக்கத்தில் பாப்பா உட்கார்ந்திருக்கு என்று சொல்லிவிட்டேன். அதன்பிறகு இதெல்லாம் முடிஞ்சு எனக்கு ஒரு கிஸ் தந்தாதான் நான் கடைசியாக பேசுவேன் என்று சொன்னேன். அதுவும் ஓகே சார்னு சொல்லிடுச்சி என்று பேசியுள்ளார். உதயகுமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“