தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனது நீதியின் மறுப்பக்கம் படத்தில் நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
Advertisment
80 – 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ரஜினியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நீதியின் மறுப்பக்கம் படத்தின் பாடல் ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். இதில் என்னுடன் அதிக படங்களில் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்தவர் செந்தில்நாதன். பின்னாளில் அவர் விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் உட்பட 23 படங்களை இயக்கியுள்ளார்.
நீதியின் மறுபக்கம் ஷூட்டிங்கின்போது ஊட்டியில் இருந்தோம் அப்போது ஒருநாள் 5 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் முடித்து ரூம்க்கு வந்துவிட்டோம். அப்போர் எல்லாருக்கும் பார்ட்டி என்று விஜய்காந்த் சொன்னார். அதன்படி செந்தில்நாதனுக்கு சரக்கை ஊற்றி கொடுக்கிறார் விஜயகாந்த். செந்திலநாதன் போதையாகிவிட்டால் உளறுவார்.
அப்படி போதை அதிகமான போது அங்கு வந்த ராதிகா இந்த டைரக்டர் உன்ன இவ்வளர் திட்டுராறே உனக்கு ரொஷமே இல்லையா அப்பப்போ அடிக்க வேற செய்றாரு என்னனு கேட்கவே மாட்டியா என்று கேட்கிறார். மறுபுறம் விஜயகாந்த் என் இடத்துல நான் இருந்திருந்தா அவரை அடிச்சிருப்பேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டு செந்தில் நாதன் அவன் கெடக்கரன் தே... என்று சொல்லி திட்டிவிட்டு அதன்பிறகு உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்கைளையும் வைத்து என்னை திட்டிக்கொண்டிருக்கிறார். அவர் திட்டுவதை நான் ஜன்னல் ஓரமாக நின்று படம் பிடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய செந்தில்நாதன் அங்கேயே மட்டை ஆகிவிட்டார்.
பிறகு அடுத்தநாள் எல்லாலும லொக்கேஷன் போய்ட்டோம். சூசைட் பாய்ண்டில் ஷூட்டிங். விஜயகாந்த் வரும்போதே வீடியோ பிளேயர் கொண்டு வந்தார். ஸ்பாட்டுக்கு வந்தவுடன் செந்தில் நாதனை அழைத்து இதில் ஒரு இந்தி படம் உள்ளது. இதில் உள்ள ஷாட் போன்று எடுக்க வேண்டும் டைரக்டர் உன்னை பார்க்க சொன்னார் என்று சொல்லி போட்டு காட்டுகின்றனர்.
இதில் தான் இரவு பேசியதை பார்த்து பயந்துபோன செந்தில் நாதன் அங்கிருந்து ஓட்டம் எடுக்க விஜயகாந்த் அவரது உதவியாளர்களை வைத்து அவரை பிடித்து என் முன் நிறுத்தினார். அப்போது சார் என்னை மன்னிச்சிடுங்க சார் என்று காலில் விழுந்தார் செந்தில் தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“