/indian-express-tamil/media/media_files/2025/04/24/RjUBxvzdX7coTtQnbfg2.jpg)
தமிழ் சினிமாவில், இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்து, பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது திருமண நாளில், தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.
1978-ம் ஆண்டு அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஏ.சந்திரசேகர் அதன்பிறகு 1981-ம் ஆண்டு இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். விஜயகாந்த் நடித்த இந்த படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்து இருவருக்குமே பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ.சி 1980-90 காலக்கட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக வைத்து சில படங்களை இயக்கினார். தற்போது விஜய் கால்ஷீட்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம், தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய், இதுதான் தனது கடைசி படம் என்றும், அடுத்து முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான இளைஞர்களை உள்ளடக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக வலம் வரும் விஜய் விரைவில், தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொள்ள இருக்கிறார். எஸ்.ஏ.சியும், அவ்வப்போது தொலைக்காட்சி நேர்காணல்களில், விஜய் குறித்து சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் தம்பதி, இன்று தங்களது 52-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த திருமண நாளில், தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.ஏ.சி, ஒரு பி.எம்.டபிள்யூ கார் ஷோரும்க்கு அழைத்து சென்று, பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ், காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ75 லட்சம் என்று கூறப்படுகிறது. கார் வாங்கியுடன, அங்கேயே எஸ்.ஏ.சி, ஷோபா இருவரும் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
WEDDING ANNIVERSARY GIFT FOR MY LOVE♥️ pic.twitter.com/FCCaXbnIqo
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.