தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற என்ற அடைமொழியுடன் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த விஜயகாந்த் தனது 33-வது திருமண நாளை கொண்டியுள்ள நிலையில், அவரை இயக்குனர் எஸ்.ஏ.சி சந்தித்துள்ளார்.
1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து பல வெற்றிப்படங்களளை வசூலில் சாதனையும் படைத்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாது தனது நல்ல குணத்திற்கும் பெயர் பெற்ற இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிப்பது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சினிமா அரசியல் என எதிலும் தலையிடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனிடையே விஜயகாந்த் இன்று தனது 33-வது திருமண நாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இந்த நாளை விஜயகாந்த் – பிரேமலதா தம்பதி தங்களது மகன்கள், மற்றும் பிரேமலதா சுதீஷ் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், விஜயகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எஸ்.ஏ.சி தனது ட்விட்டர் பக்கத்தில், என் உயிரை நான் சந்தித்த போது என்ற பதிவுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தான் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்தை நாயகனாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர், அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை விஜயகாந்துக்கு கொடுத்துள்ளார். விஜயகாந்த் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/