தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் விருப்பமே இல்லாமல் நடித்த இரண்டு படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக மாறியது என்று இயக்குனர் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
80 – 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ரஜினியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் சில யூடியூப சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனரும் பத்திரிக்கையாளருமாக சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி அளித்த பேட்டியில் விஜய் விருப்பமே இல்லாமல் நடித்து வெற்றியடைந்த படங்கள் குறித்து கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் பெல்லி சந்தடி, பவித்ர பந்தம். இந்த இரண்டு படங்களின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தேன். விஜய் ஃபேமிலி ஆடியன்ஸை கவர வேண்டும் என்பதற்காக இந்த படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் பெல்லி சந்தடி படத்தை ரீமேக் செய்ய விஜயிடம் பேசினேம்.
ஆனால் ஒன்னரை வருடங்கள் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவே இல்லை. கதை ஓல்டா இருக்கேபா என்று சொல்லி வேண்டாம் என்று சொன்னார். தெலுங்கில் இயக்கிய இயக்குனரே இங்கேயும் இயக்க வருகிறார். ஆனால் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்த படம் நிச்சயம் விஜய் படம் என்று சொல்வார்கள் நிச்சயம் சில்வர் ஜூப்ளி வெற்றியாகும் என பேசினேன். அதன்பிறகு விருப்பமே இல்லாமல் ஒப்புக்கொண்டார். அந்த படம் தான் நினைத்தேன் வந்தாய்.
அதேபோல் ப்ரியமானவளே இந்த படமும் ஹீரோயின் ஓரியண்டடா இருக்குனு சொல்லி முடியாதுனு சொல்லிட்டார். அப்போவும் இந்த படம் ஹிட் ஆகும். நிச்சயம் உனக்குதான் பெயர் கிடைக்கும் அப்போவும் விருப்பமே இல்லாமல் ஒப்புக்கொண்டு நடித்தார் இந்த இரண்டு படங்களும் பெரிய வெற்றியை கொடுத்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil’’