Advertisment
Presenting Partner
Desktop GIF

எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வான்ஸ்... அதன்பிறகு நடந்த துயரம்... இயக்குனர் எஸ்.ஏ.சி ப்ளாஷ்பேக்

எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசி வருகிறார்.

author-image
WebDesk
New Update
எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வான்ஸ்... அதன்பிறகு நடந்த துயரம்... இயக்குனர் எஸ்.ஏ.சி ப்ளாஷ்பேக்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடனான தனது சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

80 – 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் ரஜினியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக யார் இந்த எஸ்.ஏ.சி. என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடனான தனது சந்திப்பு குறித்து பேசியுள்ளார். என்னுடைய நீதிக்கு தண்டனை படம் வெளியானபோது முதல்வர் எம்.ஜி.ஆர். என்னை பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக எனக்கு தகவல் வந்தது.

இதை கேட்டு எனக்கு பயமாக இருந்தது. உடனடியாக நான் கலைஞரிடம் சென்று எம்.ஜி.ஆர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளார் என்று கூறினேன். அதற்கு அவர் நல்ல தெளிவா தைரியமா பேசுங்க என்று சொன்னார். மாலை 4.30 மணிக்கு நேரம் கொடுத்தார்கள். அப்போது நான் என் மனைவி ஷோபா எனது ஸ்டில் போட்டோகிராஃபர் ஒருவரை அழைத்து சென்றிருந்தேன்.

அங்கு 4.30 மணிக்கு நான் சென்றபோது எனக்கு பின்னால் வந்த அனைவரையும் எம்.ஜி.ஆர் சந்தித்தார். கடைசியில் நாங்கள் 3 பேர் மட்டுமே இருந்தோம். அப்போது திடீரென வந்த எம்.ஜி.ஆர் என்னை கண்டுகொள்ளாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது எதோ அவரசமாக இலங்கை தமிழர் பிரச்சினை அதான் சென்றுவிட்டார். மீண்டும் ஒருநாள் சந்திப்பதாக கூறியதாக அவரது உதவியாளர் சொன்னார்.

அதன்பிறகு ஒரு வாரம கழித்து அதே 4.30 மணிக்கு அவரை சந்திக்க போனேன். இந்த முறைய தனியாக சென்ற என்னை அவர் வா சேகர் உட்காரு என்று சொன்னார். அப்போது உங்களின் நீதிக்கு தண்டனை 5 முறை பார்த்தேன் என்று சொன்னார். அப்போது அவர் நம்மை மிரட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்பது தெரியவில்லை.

அடுத்த நிமிடம் ரொம்ப நல்ல பண்ணிருக்கீங்க என்று சொன்னார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் பிலிம்ஸ் இப்போ படம் அதிகமா பண்றது இல்ல. அதை திரும்பவும் தொடங்கனும். நீங்க வருஷத்துக்கு 2 படம் பண்ணுங்க என்று சொன்னார். இதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் நானும் சரி என்று சொன்னேன். நான் லைன் கொடுக்கிறேன் அதை டெவலப் பண்ணி படம் பண்ணுங்க நம்ம ஆபீஸ் பயன்படுத்திக்கோங்க என்று சொன்னார்.

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி அடுத்த நாள் ஒரு பெரிய தொகை எனக்கு அட்வான்சாக கொடுத்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் பிலிம்ஸ் ஆபீஸில் போய் உட்கார்ந்தேன். இதை எல்லாம் நான் கலைஞரிடம் அப்டேட் செய்துகொண்டே இருந்தேன். ஒருவாரம் கடந்தது. அப்போது திடீரென எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று எஸ்.ஏ.சி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema S A Chandrasekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment