Advertisment
Presenting Partner
Desktop GIF

ஒரு ஹீரோ நான்... இன்னொரு ஹீரோ ஜெய்கணேஷ்... எஸ்.ஏ.சி முதல் மேடை அனுபவம்!

Tamil Cinema Update : நான் வேலை பார்த்த போது அங்கு எனக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர்தான் ஜெய் கணேஷ். வசதியான வீட்டுப்பிள்ளை.

author-image
WebDesk
New Update
ஒரு ஹீரோ நான்... இன்னொரு ஹீரோ ஜெய்கணேஷ்... எஸ்.ஏ.சி முதல் மேடை அனுபவம்!

80-90 களில் தமிழ் மட்டும்லலாது இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர், 1978-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

நடிகர் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெரும் எஸ்.ஏ.சந்திரசேகரையெ சாரும். இப்படி பலருக்கு திருப்புமுனை கொடுத்த எஸ்ஏசி தற்போது தனது வாழ்வில் தான் கடந்து வந்த பாதை குறித்து யார் இந்த எஸ்ஏசி என்ற பெயரில் தொடங்கியுள்ள யூடியூப் சேனிலில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது எங்கே என்பது குறித்து எஸ்ஏசி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், சென்னையில் எனது அண்ணன் பிடபிள்யூடி-யில் வேலை  பார்த்து வந்தார். அப்போது அவருடன் இருந்த எனை அவர் வீட்டிற்கு ஊருக்கு அனுப்ப முயற்சித்து வந்தார். ஆனால் என்னை ஊருக்கு அனுப்பிவிட வேண்டாம் என்று அவர் காலில் விழுந்து கதறினேன்.

அதன்பிறகு உனக்கு ஒரு வேலை வாங்கி தகுகிறேன். அதை பார்த்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடு என்று சொன்னார் ஆனால் நான் வேலை பார்த்தால், அதிலே திருப்தி இடைந்துவிடுவேன் என்று வேண்டாம் என சொன்னேன். அதற்கு அவர் முதலில் ஒரு வேலை தேடிக்கொள் என்று சொல்லி பிடபிள்யூடி-யில் வேலை வாங்கி கொடுத்தார்.

நான் வேலை பார்த்த போது அங்கு எனக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர்தான் ஜெய் கணேஷ். வசதியான வீட்டுப்பிள்ளை. அவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தார். அப்போது அவரடம் நான் சொன்னேன். நம் ப்ரணட்ஸ் எல்லாம் சேர்ந்து ட்ராமா போடலாம் என்று. அதன்பிறகு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ட்ராமா ட்ரூப் ஸ்டார்ட் பண்ணோம்.

publive-image
நடிகர் ஜெய் கணேஷ்

சென்னையில் அப்போது கலை உலகத்திற்கு ஒரு படிக்கல் என்று சொல்லக்கூடடிய ஒற்றைவாடை தியேடடரில், எம்ஆர் ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கிய இடம் அது. இநத தியேட்டருக்கு கலைஞர்களை தூக்கிவிடக்கூடிய சக்தி இருக்கிறது. இதில் ஜெய் கணேஷ்க்கு ஒரு பெரிய டேனிங் பாய்ன்ட். நடிக்கனும்னு ஆர்வமாக இருந்த ஒருத்தர் என்னோடு சேர்ந்து நாடகம் போடுறாரு.

நானும் பிற்காலத்தில் ஒரு பெரிய நிலைமைக்கு வந்துவிட்டேன். ஜெய் கணேஷ் பாருங்க யார் கையால் குட்டு பட்டார் முதலில். கே.பாலச்சந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உலகநாயகன் கமல்ஹாசன் என்ற இரு பெரும் நட்சத்திரங்களை நமக்கு கொடுத்துள்ளார். அவர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் பண்ணாரு. பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமாகிறார்.

நாங்கள் ட்ராமா ட்ரூப் ஆரம்பித்து முதல் நாடகம் மனிததெய்வம். ஆங்காங்கே வாழ்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும். அதற்கு ஒரு காரணமும் இருக்கும். அதற்கு யாரோ ஒருத்தர் காரணமாகவும் இருப்பார்கள். அப்படி ஏற்பட்ட ஒரு திருப்புமுனை தான் மனித தெய்வம். திடீர்னு ஒருநாள் வாகினி ஸ்டுடியோவில் இருந்து மிஸ்டர் நீலகண்டன், அந்த நாடகத்திற்கு தலைமை தாங்குகிறார்.

publive-image
நீலகண்டன் அவருடைய மனைவி

அவரும் அவருடைய மனைவியும் இந்த நாடகத்திற்கு வந்திருக்கிறார்கள் ஆனால் எங்களுக்கு தெரியாது. நாங்கள் நாடகத்தை தொடங்கிவி்ட்டோம். இதில் நான் ஒரு ஹீரோ ஜெய் கணேஷ் ஒரு ஹீரோ. நாடகம் முடிந்தவுடன் நீலகண்டன் மேடைக்கு வருகிறார். என்னை பார்த்துவிட்டு நல்லாருக்கு தம்பி கதை நல்லாருக்கு நாளைக்கு என்னை வந்து பார்க்கிறாயா என கேட்கிறார்.

ஆனால் நான் நீங்கள் யார் சார் என்று கேட்கிறேன். நான் வாகினி ஸ்டூடியோவில் ப்ரோகிராம் இன்சார்ஜ்-ஆக இருக்கிறேன் என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன உடனே எனக்கு எதோ புளியம்கொம்பு கையில் கிடைத்தது போல ஒரு நம்பிக்கை.ஏன்னா எத்தனை நாள் நான் அந்த ஸ்டூடியோவில் வாசலில் மணிக்கணக்காக நின்றிருக்கிறேன். அதையெல்லம் நித்த்து பார்த்தேன்.

எதோ சினிமா சம்பந்தப்பட்ட ஒருவர் என் கையில் மாட்டிக்கிட்டார். எதை நோக்கி பயணப்பட்டேனோ அந்த பயணத்தில் வந்த சோகங்கள் பசி பட்டினி அத்தனையும் தாண்டி அரசு வேலை இதெல்லாம் தாண்டி என்னமோ ஒரு கைபிடி கிடைத்த மாதிரி எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு பெரிய கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரிதான் நமது எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம்.

இந்த நம்பிக்கையுடன் நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட்டால் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்களால் கண்டிப்பாக போக முடியும். அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் என் வாழக்கையை உங்களோடு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema S A Chandrasekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment