தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்னெ தனி முத்திரை பதித்தவர் நடிகர் விஜயகாந்த். புரட்சி கலைஞர், கேப்டன் என பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான இவர், பல தடைகளை கடந்து சினிமாவில் நாயகனாக உருவாகி பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜயகாந்துக்கு உண்டு.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் தான் என்ன சாப்பிடுகிறோமோ அதையே தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்த விஜயகாந்த், பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். அதேபோல் ஆரம்ப கட்டத்தில் விஜயகாந்த்க்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உதவும் வகையில் செந்தூரபாண்டி படத்தில் முழுநீள கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் ஆக்டீவாக இல்லை என்றாலும், அவர் பற்றிய தகவல்களை அவருடன் பழகிய பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான்என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். ஒருநாள் சென்னை டிநகரில் இரவு 1.30 மணிக்கு விஜயகாந்த் நைட் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் வந்துகொண்டிருக்கிறார்.
அப்போது, ஒருவன் கத்தியை கையில் வைத்துக்கொண்டு கொலை செய்வதற்காக மற்றொரு நபரை துரத்திக்கொண்டிருக்கிறான். இந்த சம்பவத்தை பார்த்த விஜயகாந்த், உடனடியாக காரை நிறுத்தி கத்தியுடன் துரத்திய நபரை பின்னால் துரத்தி சென்று பிடித்து, அடித்து டி.நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லா விஜயகாந்த் நிஜத்திலும் ஹீரோ தான்.
நிஜத்தில் ஒரே நேரத்தில் 20 பேரை அடிக்கும் பலம் அவரிடம் இருக்கிறது. மற்ற யாராக இருந்திருந்தாலும் இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் சென்றிருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி செய்யாமல் அந்த இடத்தில் தைரியமாக அந்த நபரை எதிர்கொண்டு பிடித்து கொடுத்துள்ளார் என்று கூறியுள்ள இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த காட்சியை தனது படத்திற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“