பருத்தி வீரன் படம் குறித்து இயக்குனர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகிய இருவர் குறித்து விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இயக்குனர் சசிகுமாரை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதில் பருத்தி வீரன் படத்தை இயக்கிய இயக்குனர் அமீர் முதலில் அந்த படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பருத்தி வீரன் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, அமீருக்கு உதவுவதற்காக வந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு கட்டத்தில் அந்த படத்தை தனது நிறுவனத்தின் பெயரில் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதில் இயக்குனர் அமீருக்கு சேர வேண்டிய தொகையை அவர் கொடுக்கவில்லை என்பதால், இது குறித்து அமீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அமீர் வராததை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, பல யூடியூப் சேனல்களில் அளித்த பேட்டியில் அமீர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் தவறை மறைக்கவே வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி வருகிறார்.
#Ameer#TANTIS #இயக்குனர்கள்சங்கம் #RKSelvamani #RVUdhayakumar pic.twitter.com/74jPCXTUJS
— M.Sasikumar (@SasikumarDir) November 25, 2023
அதே சமயம் இந்த விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நேற்று இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் 'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை என்று பதிவிட்டிருந்தார். ‘
அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்
— M.Sasikumar (@SasikumarDir) November 24, 2023
'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை#StandWithAmeer pic.twitter.com/IaLH21xbIB
தொடர்ந்து வெளியிட்ட 2-வது பதிவில், அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு.இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம் என்று கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி,
— P.samuthirakani (@thondankani) November 25, 2023
உங்கள தயாரிப்பாளர் ஆக்குனது கார்த்தியை ஹீரோவாக்குனர் அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க ப்ரதர். தப்பில்லையா? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம். அண்ணன் இந்த படத்திற்கு எவ்வளவு உழைச்சிருக்கார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் என்பது எனக்கு தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. அதன்பிறகு அந்த படத்தை முடிக்க ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட நண்பர்கள் சொந்தக்காரர்கள் என அவர் சொல்ல சொல்ல, ஒரு லட்சம், ஐம்பது ஆயிரம் 2 லட்சம் என வாங்கி வந்து கொடுத்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பண்ம் கொடுத்திருக்கான் ப்ரதர் அந்த படத்துக்கு.
அம்பது அறுவது பேர் சேர்ந்து தான் இந்த படத்தை முடிச்சோம். கடைசியில் நீங்க வந்து தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க. உண்மையில் யார் தயாரிப்பாளர் சொல்லுங்க. தயாரிப்பாளர் பதவியை அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக்கொடுத்தார். இந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால் களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறது தான் என்னால் இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியால என்று சமுத்திரக்கனி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.