இப்போ நீங்க நடிக்கலனா உங்க அம்மாட்ட சொல்லிடுவோம்; மிரட்டிய இயக்குனர், பயந்து நடுங்கிய எம்.எஸ்.வி: அஜித் பட சுவாரஸ்யம்!

இந்த படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதானின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.

இந்த படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதானின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
MSV In Kadhal Manan

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி அம்மாவுக்கு பயந்தவர் என்ற வீக்னஸை வைத்து அவரை ஒரு படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் சரண்.

Advertisment

இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். அதனைத் தொடர்ந்து அமர்க்களம், ஜே.ஜே, அட்டகாசம், அசல், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக ஆரவ் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இவர் தனது முதல் படமான காதல் மன்னன் படத்தை இயக்க தயாரானார். இந்த படத்தை, வெங்கடேஷ்வராலயம் என்ற நிறுவம் சார்பில், சுதிர் குமார் என்பது தயாரித்திருந்தார். அஜித்துடன் இணைந்து, புதுமுகம் மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதானின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவரின் காமெடி இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் முதலில் இந்த மெஸ் விஸ்வநாதன் கேரக்டரே இல்லை. ஒருமுறை விவேக், இயக்குனர் சரணுக்கு போன் செய்து, எம்.எஸ்.வி இன்டர்வியூ ஒன்றை பார்க்குமாறு கூறியுள்ளார். அதை பார்த்த சரண் தனது படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதே சமயம் கதை விவாதம் எல்லாம் முடிந்துவிட்டது நடுவில் எப்படி ஒரு கேரக்டரை சேர்ப்பது என்று யோசித்துள்ளனர்.

Advertisment
Advertisements

ஹீரோ ஒரு மேன்ஷனில் தங்கியிருப்பார் என்பதால் அந்த மேன்ஷனில் மெஸ் வைத்திருப்பவர் என்ற கேரக்டரை எம்.எஸ்.விக்காக உருவாக்கியுள்ளனர். அதன்பிறகு விவேக்குடன் சென்று எம்.எஸ்.வியை சந்தித்துள்ளார் சரண். ஆனால் அவரோ என்னால் நடிக்க முடியாது என்று முதல் வார்த்தையிலேயே கூறியுள்ளார். நடிக்க தான் நான் வந்தேன். ஆனால் இப்போது நான் மியூசிக் டைரக்டர் என்னை மியூசிக் போட கூப்பிடுங்க என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2-3 மாதங்கள் அவரிடம் சரணும் விவேக்கும் இணைந்து நடையே நட என்று நடத்துள்ளனர்.

கடைசி எம்.எஸ்.வி நடிக்க ஒப்புக்கொள்வதாக இல்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் அவரை கண்டபடி இருவரும் மிரட்டியுள்ளனர். நாங்கள் உங்களை நடிக்க கூப்பிட்டும் நீங்கள் வரவில்லை. உங்க அம்மா சொன்னாலாவது வருவீங்களானு பார்ப்போம் என்று சொல்லி, எம்.எஸ்.வி அம்மா படத்துக்கு முன்பு ஒரு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அம்மா மீது பயமும் மரியாதையும் கொண்ட எம்.எஸ்.வி ஒரு வழியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு தான் இந்த படத்திற்காக 10 லட்சம் சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி, அதில் 5 லட்சம் தனக்கும், 5 லட்சம் ராமமூர்த்திக்கும் என்று கூறியுள்ளார். இதை இயக்குனர் சரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார். காதல் மன்னன் படத்தில் எம்.எஸ்.வி கேரக்டர் கடைசியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த கேரக்டர் இல்லால் படம் முழுமையடையாது என்று சொல்லும் அளவுக்கு பெரிய கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. 

M S Viswanathan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: