Tamil Cinema Update : 1980-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 1978-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்நது விஜயகாந்த, ரஜினிகாந்த், என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் விஜயகாந்த் நாயகனாக நடித்துள்ளார்.
Advertisment
Advertisment
Advertisements
முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கும்போது அதில் குழந்தை நட்சத்திரமாக தனது மகன் விஜய்யை அறிமுகம் செய்த எஸ்ஏ சந்திரசேகர் 1992-ம் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தில் விஜய்யை நாயகனாக அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து பல படங்களை இயக்கிய எஸ்ஏசி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இவர் சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் யார் இந்த எஸ்ஏசி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ள எஸ்ஏ சந்திரசேகர், அதில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம் சோகம் மகிழ்ச்சி உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். மேலும்இவர் இரவில் ப்ளாட்பார்மில் உறங்குவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யார் இந்த எஸ்ஏசி தொடரில் 2-வது எபிசோடு தற்போது வெளியாகியுள்ளது. இதில் பேசும் எஸ்ஏசி, தனது மகள் வித்யா குறித்து பேசியுள்ளார். அதில் கடவுள் கொடுத்தது 2 குழந்தைகள் விஜய், வித்யா. வித்யா 3 வயதில் படு சுட்டியாக இருப்பாள் என்னை என் மனைவி என அனைவரையும் பெயரை சொல்லித்தான் அழைப்பாள். விஜயை கூட டேய் டேய் அண்ணா என்றுதான் அழைப்பாள். எங்கள் எல்லோருக்கும் அவளை மிகவும் பிடிக்கும்.
ஆனால் எங்களை விட கடவுளுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது போல. வித்யா என்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி கடவுகள் அவளை மூன்றரை வயதில் தன்னிடம் அழைத்துக்கொண்டார். 2 குழந்தைகளை கொடுத்த கடவுகள் அதில் ஒன்றை எடுத்துக்கொண்டாரே என்ற வருத்தம் எங்களுக்குள் அதிகமாக இருந்ததது. அதன்பிறகு எங்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, நான் என்ன செய்தேன் என் மனைவி எப்படி தாங்கினார் விஜய் எப்படி மாறினார் என்பது பற்றி இந்த வீடியோவில் சொல்லப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன் வீடியோ முடிந்துவிட்டது. 3-வது எபிசோட்டில் எஸ்ஏசி விரிவாக இதுபற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வீடியோவில் இறந்த குழந்தை வித்யாவுடன் எஸ்ஏசி குடும்பத்துடன் இருக்கும் பல புகைப்படங்களை இணைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ யூடியூப் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil