'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கதில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்தனர்.
இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்த இப்படம் திரையரங்கை விட ஓ.டி.டி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தின் வெளியீட்டிற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒரு புதிய படத்தைத் தொடங்க இருப்பதாகவும், இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகும் திரில்லர் கதையாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த சூழலில், இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியை விட்டு பிரிய இருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் சீனு ராமசாமி செய்துகொண்ட நிலையில், சுமார் 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியை பிரிய இருப்பதாகவும், பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளதாகவும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சீனு ராமசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்பானவர்களுக்கு வணக்கம், நானும் எனது மனைவி ஜி.எஸ் தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அறிவிப்பு
— Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2024
.....................
அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.