நல்ல விஷயம் பண்ண... இதை பண்ணாதீங்க: விளங்காம போய்டும்; செல்வராகவன் வைரல் வீடியோ!

நீங்க ஒரு விஷயத்தை சொல்லி அதை கேட்டு அவங்க சந்தோஷப்படுவாங்கன்னு நினைக்கிறீங்களா?

author-image
WebDesk
New Update
Selvaragavan

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனரும், தற்போது பிஸியாக நடிகருமான செல்வராகவன், தனது சமூகவலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அட்வைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.  அடுத்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, என்.ஜி.கே, உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலணி 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக செல்வராகவன், அடுத்து பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்க வாசல் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் செல்வராகவன், அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், இப்போ நீங்க ஒரு விஷயம் பண்ண போறீங்க, ஒரு லட்சியத்தை அடைய தயாராகிட்டு இருக்கீங்க. இதற்கு ப்ரிப்ரேஷன் பண்ணிட்டு இருக்கீங்க, அது ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனால் அந்த விஷயத்தை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுட்டு இருக்கீங்க.

நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? என்ன செய்யப் போறேன் தெரியுமா? அப்படின்னு எல்லோர்கிட்டயும் சொல்லி இருந்தீங்கன்னா கடைசில அந்த காரியம் விளங்காம போயிரும். நீங்க ஒரு விஷயத்தை சொல்லி அதை கேட்டு அவங்க சந்தோஷப்படுவாங்கன்னு நினைக்கிறீங்களா? இந்த உலகத்தில் யாருமே எதுக்காகவும் மத்தவங்களோட வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்பட மாட்டாங்க. ரொம்ப அமைதியா இருங்க, அமைதியா வேலை பாருங்க, அமைதியா போங்க, அமைதியா வாங்க.

Advertisment
Advertisements

இங்க வேலை செய்யுறது யாருக்குமே தெரியக்கூடாது. உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட கூட சொல்லாதீங்க. அது மட்டும் இல்லாம யார்கிட்டயும் உதவி கேட்காதீங்க. நீங்க ஒருத்தர்கிட்ட சின்ன உதவி தான் கேட்டிருப்பீங்க. அந்த உதவியை அவங்க செஞ்சுடுவாங்க. ஆனா உங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி, என்னால தான் அவன் இந்த அளவுக்கு பெரிய ஆளா வந்தான். அப்படின்னு சொல்லுவாங்க. நான் தான் அவனுக்கு அந்த உதவியை செஞ்சேன்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஒன்றைணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு உதவி செஞ்ச மாதிரி பேசுவாங்க என்று கூறியுள்ளார். செல்வராகவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர் சொல்வது சரிதான் என்று கூறி வருகின்றனர். 

Selvaraghavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: