பெரியாரை அவமதித்தாரா இயக்குனர் செல்வராகவன்? சர்ச்சையும் விளக்கமும்!

Selvaraghavan Vs Periyar Supporters : நேர்காணல் நிகழ்ச்சியில் பெரியார் குறித்த சர்ச்சை கேள்விக்கு பதிலளித்தது குறித்து இயக்குநர் செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

Director Selvaraghavan Periyar Controversy : நேர்காணலில் பெரியார் குறித்து சர்ச்சை கேள்விக்கு பதிலளித்தது குறித்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இயக்குநர் செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய சிறந்த படங்களை கொடுத்த இயக்குநர் செல்வராகவன், கடந்த 2016-ம் ஆண்டு இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிய இந்த படத்தில் எஸ்ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்திருந்தனர். 2016-ம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்த படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போன நிலையில், 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.

ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா சைகோ கொலைகாரனாக நடித்திருந்தார். மேலும இந்த படத்தில், எஸ்ஜே சூர்யாவின் கதாப்பாத்திரத்திற்கு பெயர் ராமசாமி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பெயருக்கு தான் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் நெறியாளர், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகன் கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் ராமசாமி என்று பெயர் வைத்தது ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காத செல்வராகவன் ஆம் என்று பதில் அளித்திருந்தார்.

ஆனால் செல்வராகவனின் இந்த பதிலுக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் பெரியார் ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் செல்வராகவனுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செல்வராகவன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  இதில் நெறியாளர் கேட்ட கேள்வி புரியாமல் ஆம் என்று சொல்லி விட்டேன. இதில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தனது பதிலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema director selvaraghavan expained periyar controversy

Next Story
மேடைக்கு அழைத்த பாரதி… ஓடி ஒளிந்த கண்ணம்மா… சந்திப்பு நடக்குமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com