வயசு இருக்கு ரஜினி, இப்போ இந்த படம் வேணாம்; டைரக்டர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்: எந்த படம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சினிமாவில் தனது 50-வது வருடத்தை நிறைவு செய்துள்ள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கூலி படத்திற்கு பிறகு. ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சினிமாவில் தனது 50-வது வருடத்தை நிறைவு செய்துள்ள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கூலி படத்திற்கு பிறகு. ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
rajinikanth SP Muthuraman

இன்னும் வயசு இருக்கு ரஜினி, ரசிகர்கள் உன்னை இந்த கேரக்டரில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த், ஒரு படத்தை இயக்கி சொல்லி வற்புறுத்த, அந்த படம் கடைசியில் தோல்வியில் முடிந்தது.

Advertisment

தமிழ் சினிமாவில், எவ்வித பின்புலமும் இல்லாமல் தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து வெற்றி பெற்ற நடிகர் தான் ரஜினிகாந்த். 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சினிமாவில் தனது 50-வது வருடத்தை நிறைவு செய்துள்ள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கூலி படத்திற்கு பிறகு. ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

போதுவாக நடிகர்களுக்கு 50-வது, 100-வது படங்கள் அவ்வளவு பெரிதாக எடுபடுவதில்லை என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அதிகமாக உள்ளது. அந்த வகையில் பல வெற்றிகளை கொடுத்த ரஜினிகாந்துக்கு அவரது 100-வது படம் பெரிய தோல்வியில் முடிந்தது. 1985-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ரஜினிகாந்தின் குரு கே.பாலச்சந்தர் தயாரிக்க, அவரை வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தை இயக்கினார். படத்தின் பெயர் ஸ்ரீராகவேந்திரா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சாமியார் கேரக்டரில் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தை தான் கமர்ஷியல் ஹீரோவாக இருந்த காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன், ரஜினிகாந்த் எஸ்.பி.முத்துராமனிடம் இந்த படம் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர், தான் வளர்ந்து இவ்வளவு பெரிய ஆளாக மாறியதற்கு அவரது ஆசீர்வாதம் தான் காரணம். அதனால் அவராகவே நான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்போது நீ கமர்ஷியல் ஹீரோ, இப்போது அந்த படம் வேண்டாம். கொஞ்சம் வயசு ஆகட்டும் என்று எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு சில நாட்கள் கழித்து அவசரமாக வந்த ரஜனிகாந்த, எனது 100-வது படம் ஸ்ரீராகவேந்திரா, இந்த படத்தை கே.பாலச்சந்தர் தயாரிக்கிறார். எஸ்.பிமுத்துராமன் இயக்குகிறார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எஸ்.பிமுத்துராமன், நான் தான் இன்னும் கொஞ்சம் வயசு ஆகட்டும் என்று சொன்னேனே, அதற்குள் என்ன அவசரம என்று கேட்க, இந்த படத்தை 100-வது படமாக பண்ண வேண்டும் என்று என் மைண்டுக்குள் வந்துவிட்டது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார், ஆனால் திரும்பவும் யோசிக்குமாறு எஸ்.பி.முத்துராமன் கூறினாலும், ரஜினிகாந்த் விடாபிடியாக இருந்துள்ளார்.

நீ கமர்ஷியல் ஹீரோ, ஆனால் ராகவேந்திரா கேரக்டரில், ரசிகர்கள் எப்படி உன்னை ஏற்றுக்கொள்வார்கள்? தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர். மற்ற படங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிடும், ஆனால் இந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நானும் ஒரு சுயமரியாதை குடும்பத்தில் இருந்து வந்தவன், இந்த படத்தை என்னால் பண்ண முடியுமா என்று தெரியவில்லை என்று எஸ்.பிமுத்துராமன் சொல்ல, பிரச்னை கே.பாலச்சந்தரிடம் சென்றுள்ளது. அவர் இவரை சமாதானப்படுத்தி படத்தை இயக்குமாறு கூறியுள்ளார்.

இப்படி பல தடைகளை கடந்து படத்தை இயக்க ஒப்புக்கொண்ட எஸ்.பி.முத்துராமன் புராண படங்களை எப்படி இயக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள, பழம்பெரும் இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் படங்களை பார்த்து தெரிந்துகொண்டதாக ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: