தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிகளை கொடுத்துள்ளார். இந்த வகையில் ஒரு இயக்குனராக தான் இயக்கிய படங்களில் வடிவேலுவை இணைத்துக்கொண்ட சுந்தர் சி தலைநகரம், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களில் காமெடியிலும் கலக்கியிருந்தார்.
இவர்கள் கூட்டணியில் வந்த வின்னர், லண்டன், கிரி, ரெண்டு உள்ளிட்ட படங்கள் இன்னும் காமெடியில் பேசக்கூடிய படங்களாக உள்ளது. இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சுந்தர் சி படங்களில் வடிவேலு நடிக்காத நிலையில், சந்தானம் மற்றும் சூரியுடன் கூட்டணி அமைந்து சுந்தர் சி தனது படங்களை இயக்கி வந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த கலகலப்பு அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரூ100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிபடங்களின் பட்டியலில் அரண்மனை இணைந்துள்ளதால், படத்தை இயக்கி நடித்த சுந்தர்.சி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அடுத்து கலகலப்பு படத்தின் 3-ம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்த இவர், அரண்மனை 4 படம் கொடுத்த வெற்றியின் காரணமாக அடுத:த ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த சுந்தர்.சி. அதற்கான முயற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது இருவரும் இந்த படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் சரியாக அமையவில்லை. அடுத்து நடித்த மாமன்னன் படம் நன்றாக இருந்தாலும், வடிவேலுவுக்கு சரியாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.
இதனிடையே தற்போது மீண்டும் சுந்தர்.சி. வடிவேலு காம்போ இணைவரு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வின்னர் உள்ளிட்ட சில படங்களை போல் இந்த படமும் காமெடியில் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“