scorecardresearch

சுந்தர்.சி – லெஜண்ட் சரவணா திடீர் சந்திப்பு : அடுத்த பட அறிவிப்பு வெளியாகுமா?

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான அருள் சரவணன், கடந்த ஜூலை மாதம் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

சுந்தர்.சி – லெஜண்ட் சரவணா திடீர் சந்திப்பு : அடுத்த பட அறிவிப்பு வெளியாகுமா?

தமிழ சினிமாவில் காமெடி இயக்குனரான சுந்தர் சி இன்று தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணாவை வந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது நிறுவனத்தில் விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான அருள் சரவணன், கடந்த ஜூலை மாதம் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இரட்டை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கிய இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.

தனது நிறுவனத்தின் மூலம் அருள்சரவணனே தயாரித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ருத்வாலா நடித்திருந்தார். மேலும் நாசர், பிரபு, விஜயகுமார், விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த தி லெஜண்ட் படம், ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் தனது நடிப்பு ஆர்வத்தை விடாத அருள் சரவணன் அடுத்த படத்திற்காக கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் காமெடி கலக்கல் இயக்குனரான சுந்தர் சி அருள் சரவணனை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.

இந்த சந்திப்பு காரணமாக அருள் சரவணனின் அடுத்த படத்தை சுந்தர் சி தான் இயக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த சந்திப்பில் படம் இயக்குவது தொடர்பாக எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும், இந்த சந்திப்பு வேறு காரணங்களுக்காக நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த சந்திப்பு தொடர்பான தகவல் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema director sundar c meet legend saravana viral on social media