தமிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர் சுந்தர்.சி. பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும், இயக்கம் சுந்தர்.சி என்று இருந்தாலே தியேட்டரில் படம் பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அந்த அளவுக்கு காமெடி படங்களை கொடுத்து வெற்றி கண்ட இவர், நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் பிரபல நடிகை ஒருவருக்கு ப்ரபோஸ் செய்திருப்பேன் என்று சுந்தர்.சி கூறியுள்ளார்,
சுந்தர்.சி. இயக்கிய முதல் படமான முறைமாமன் படத்தில் நாயகியாக நடித்தவர் தான் குஷ்பு. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். குஷ்பு முன்னணி நடிகையாக இருக்கும்போது சினிமாவில் அறிமுகமான சுந்தர்.சி. அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பான செய்தியாக மாறியிருந்தது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தனது சம காலத்தில் இயக்குனர்களாக இருந்த பலரும் தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்டாலும் சுந்தர்.சி தொடர்ந்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த வரும் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.தற்போது வடிவேலுவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி நடித்து வரும் சுந்தர்.சி. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு ஒரு நடிகை மீது க்ரஷ் இருந்தது என்று கூறியுள்ளார்.
நான் வொர்க் செய்தததில் ரொம்பவும் பிடித்த ஹீரோயின் என்றால் அது சௌந்தர்யாதான். என்னுடைய வாழ்க்கையில் ஒருவேளை குஷ்புவை சந்திக்காமல் இருந்திருந்தால் சௌந்தாயாவுக்கு ப்ரபோஸ் செய்திருப்பேன். அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். இப்படி ஒரு நல்ல கேரக்டர் உள்ள பெண்ணை பார்ப்பது அரிது. அதேபோல் அவரது அண்ணன், அவரை விட்டு ஒரு செகண்ட் கூட நகரமாட்டார். படபப்பிடிப்பு தளத்தில் எப்போதும் தனது தங்கைக்கு துணையாக இருப்பார். அதன் காரணமாகத்தான் இருவரும் ஒன்றாகவே இறந்துவிட்டார்கள். சௌந்தர்யாவின் மரணம் ரொம்பவும் துரதிஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“