பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் சினிமா விழா ஒன்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து பேசிய வீடியோ பதிவை தற்போது அ.தி.மு.க.வினர் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
Advertisment
தமிழகத்தில் எம்ஜிஆர் என்ற 3 எழுத்தை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லாம். சினிமா அரசியல் இரண்டிலும் தனது ஆளுமையை செலுத்தி பெரும் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர். தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதல்வராக வெற்றி பெற்றுள்ளார். தனது திரைப்படத்திலும் கூட மக்களுக்கு தேவையான கருத்துக்களுக்கு முக்கியத்தவம் கொடுத்த எம்.ஜி.ஆர் தனது நிஜவாழ்க்கையிலும் அதன்பிரதிபலிப்பாகவே இருந்துள்ளார்.
தற்போது அவர் மறைந்துவிட்டாலும், அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்றும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. காலத்தால் அழிக்கமுடியாக புகழை பெற்றுள்ள எம்.ஜி.ஆர் தொடங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எம்.ஜி.ஆர் முகத்திற்காகவே வாக்களிக்கும் அவர் உண்மையாக தொண்டர்களும் இருக்கிறார். தற்போது அதிமுகவில் இ.பி.எஸ். ஒ.பி.எஸ் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர்.பற்றி இயக்குனர். ஆர்.சுந்தர்ராஜன் பேசிய வீடியோ பதிவை அ.தி.மு.க.வினர் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்
அந்த வீடியோ பதிவில், ஆர். சுந்தர்ராஜன் பேசுகையில்,
அம்மன்கோவில் கிழக்காலே படம் கம்போசிங் நடக்குபோது ஹோட்டல் ரூமில் ஒருநாள், டிவியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பிளாக் & ஒயிட் பாட்டை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென என்னா அழகன்ய்யா, பேரழகன் என்று சொல்லும் சத்தம் கேட்டது. பின்னாடி திரும்பி பார்த்தால், இசைஞானி இளையராஜா என் ரூமுக்குள் வந்திருக்கிறார்.
டிவியை பார்த்து கொண்டிருந்ததால், அவர் எப்போது உள்ளே வந்தார் என்றே எனக்கு தெரியல. அவர் பேரழகன் என்று சொன்னது, புரட்சி தலைவர் எம்ஜிஆரை. மதுரை வீரன் படத்தில் வரும் நாடகமெல்லாம் கண்டேன் என்ற பாட்டை பார்த்துவிட்டுதான் இப்படி சொன்னார். ஒரு ஞானி, ஒரு சாமியார் என்று சொல்லக்கூடிய இளையராஜாவே, இப்படி அழகை வர்ணித்து சொன்னார்.
பொதுவாக, பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். ஆனால், ஆம்பளைங்களுக்கே இன்னொரு ஆம்பளையை பிடித்த ஒரே தலைவர் அது புரட்சிதலைவர் எம்ஜிஆர் மட்டுமே. இளவரசன் டிரஸ்ஸை இப்போது எந்த டாப் ஸ்டார் நடிகர்களுக்கு போட்டாலும் நல்லா இல்லையே. யாரையுமே ரசிக்க முடியல. இளவரசன் டிரஸ்ஸை போட்டு, கத்தியை எடுத்து போஸ் தருவது போல், எம்ஜிஆரை தவிர வேறு யாருமே நல்லாவே இல்லை.
இந்த உலகம் இருக்கும்வரை அவரை மட்டும்தான் ரசித்து கொண்டிருக்க முடியும். சின்னப்பா தேவருக்கு எல்லாவித சண்டை பயிற்சிகளையும் தெரியும். ஆனால், எம்ஜிஆர் சிலம்பம் எடுக்கும்போது, இருக்கும் அழகு, சின்னப்பா தேவரிடம் காணப்படவில்லையே.. தான் கஷ்டப்படற காலத்திலேயே ஏழைகளுக்கு நிறைய உதவி செய்தவர், எந்நேரமும் மக்களை பற்றி மட்டுமே சிந்தித்தவர் எம்ஜிஆர்' என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil