அமெரிக்கா சென்ற எஸ்.பி.பி; இளையராஜா இசையில்... ஒரு மாதம் காத்திருந்த பாடல்!

இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா, அவன் இங்கு இல்லை அமெரிக்க போய்விட்டான் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறியுள்ளார்.

இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா, அவன் இங்கு இல்லை அமெரிக்க போய்விட்டான் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SPB Udhayakumae

சினிமாவில் பல ஹிட் பாடல்களையும் படங்களையும் கொடுத்த இயக்குனர் ஆர்.வி உதயகுமார், இளையராஜா இசையில் தான் எழுதிய முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்துது என்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Advertisment

திரைப்படக்கல்லூரி மாணவராக 1986-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.வி உதயகுமார், 1988-ம் ஆண்டு, வெளியான உரிமை கீதம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர். அதன்பிறகு, புதிய வானம், உறுதிமொழி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.

குறிப்பாக புதிய வானம் படத்தில், சிவாஜி கணேசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சத்யராஜ், கௌதமி, ரூபினி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன்பிறகு 1990-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் என்ற படத்தை இயக்கினார். கார்த்திக், ரேவதி, குஷ்பு, மனோரமா, விஜயகுமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

தான் இயக்கிய முதல் படமாக உரிமை கீதம் படத்தில் தொடங்கி தான் இயக்கிய படங்களில் பாடல்கள் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கிழக்கு வாசல் படத்தில், 4 பாடல்களை எழுதியுள்ளார். இதில் முதலில் எழுதிய பாடல் ‘பச்சமலை பூவு’ என்ற பாடல். இந்த பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவிடம், இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா, அவன் இங்கு இல்லை அமெரிக்க போய்விட்டான் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட ஆர்.வி உதயகுமார் பரவாயில்லை சார் நான் வெயிட் பண்றேன். அவர் வரட்டும் என்று கூறியுள்ளர். ஆனால் இளையராஜா, என்னயா நான் சொல்றேன் வேற சிங்கர்ஸ் இந்த பாடலை பாட மாட்டாங்களா என்று கேட்க, மற்றவர்கள் பாடுனா எனக்கு பிடிக்காது சார் என்று கூறியுள்ளார் ஆர்.வி.உதயகுமார். அடுத்து, ஒரு மாதம் கழித்து எஸ்.பி.பி வர, அதன்பிறகு, இந்த பாடல் பதிவாகியுள்ளது. இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Singer Sp Balasubramaniam Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: