'வடிவேலுவும் அந்த நடிகையும் ஒரே அறையில்...': பிரபல இயக்குனர் அதிர்ச்சி பேட்டி

வடிவேலு-வும் பிரபலமான அந்த காமெடி நடிகையும் (நடிகையின் பெயரை குறிப்பிட்டு வி. சேகர் பேசுகிறார்) அங்க ஒண்ணா நின்னு மேக்கப் போடுறாங்க. அப்படின்னா புரிஞ்சுக்கோங்க...' என்கிறார் வி. சேகர் தனது பேட்டியில்.

வடிவேலு-வும் பிரபலமான அந்த காமெடி நடிகையும் (நடிகையின் பெயரை குறிப்பிட்டு வி. சேகர் பேசுகிறார்) அங்க ஒண்ணா நின்னு மேக்கப் போடுறாங்க. அப்படின்னா புரிஞ்சுக்கோங்க...' என்கிறார் வி. சேகர் தனது பேட்டியில்.

author-image
WebDesk
New Update
Tamil Cinema director v sekhar talks about actor Vadivelu Tamil News

நீங்கள் கூட சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு போய் வந்தீர்கள். அதனால் உங்களை குற்றவாளி என கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? என ரசிகர்கள் பலர் வி. சேகருக்கு காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

குடும்பப் பாங்கான படங்களை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் வி. சேகர். ஒரு சேனலுக்கு இவர் அளித்திருக்கும் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு படப்பிடிப்பின் போது 'ஏன் சார் ரெண்டு ரூம் போடுறீங்க? ஒரே ரூமா போட்டுருங்க... என வடிவேலு சொன்னார். பரவாயில்லையே... தயாரிப்பு செலவை குறைக்கிறார்... என நினைத்தேன். அப்புறம் பார்த்தா, இவரும் பிரபலமான அந்த காமெடி நடிகையும் (நடிகையின் பெயரை குறிப்பிட்டு வி. சேகர் பேசுகிறார்) அங்க ஒண்ணா நின்னு மேக்கப் போடுறாங்க. அப்படின்னா புரிஞ்சுக்கோங்க...' என்கிறார் வி. சேகர் தனது பேட்டியில். 

Advertisment

மேலும், 'இருவரும் அந்த அறைக்குள் இருந்து கொண்டு திறக்கவே மாட்றாங்க' என யூனிட்டில் உள்ளவர்கள் புகார் சொன்னதாகவும் வி. சேகர் பேசியிருக்கிறார். விஜயகாந்துக்கு எதிராக வடிவேலு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தபோது தான் எச்சரித்ததாகவும், வடிவேலு அதை கேட்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் வி. சேகர் தான் எச்சரித்தது போல அந்த பிரச்சாரத்திற்கு பிறகு வடிவேலுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றும் பேசி இருக்கிறார். 

இந்த பேட்டியில் ஒரு அறையில் நடிகையுடன் வடிவேலு இருந்ததாக வி. சேகர் பேசி இருப்பதற்கு சமூக வலைதளங்களில் வடிவேலுவின் ரசிகர்கள் பலரே கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். 'ஒரு நடிகையுடன் ஒரே அறையில் அவர் இருந்ததை வைத்து நீங்கள் எப்படி தவறாக எடுத்துக் கொண்டு பேசலாம்? அப்படி ஏதாவது தவறு நடந்திருந்தால் அதை அந்த நடிகை அல்லவா கூறி இருக்க வேண்டும்? நீங்கள் கூட சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு போய் வந்தீர்கள். அதனால் உங்களை குற்றவாளி என கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? என ரசிகர்கள் பலர் வி. சேகருக்கு காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு உட்கார்ந்து படம் பார்க்கும் வகையில் நிறைய படங்களை எடுத்து பெயர் வாங்கியவர் வி. சேகர். அவர் இப்படி ஒரு நடிகர் மற்றும் நடிகையின் தனிப்பட்ட விவகாரத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் பேசலாமா? என பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். வடிவேலு மற்றும் குறிப்பிட்ட அந்த நடிகை இதற்கு என்ன ரியாக்ஷன் காட்டப் போகிறார்கள்? வி. சேகர் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்பது போகப் போகத் தெரியும்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: