தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வெற்றிமாறன் தான் சினிமாவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்னம் தான் என்று கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனைத் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றியை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரி நாயகனாக நடித்த நிலையில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் 2-ம் பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது யார் என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற சிஐஐ டக்ஷின் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன் தான் சினிமாவுவுக்கு வந்த முழு காரணம் இயக்குனர் மணிரத்னம் தான் என்று கூறியுள்ளார். காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, வெற்றிமாறன், மணிரத்னம் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் கூறுகையில்,
மணிரத்னம் என்னை மாஸ்டர் என்று அழைக்கும்போது நான் சங்கடமாக உணர்க்கிறேன். ஆனால் இவர் இளைஞர்களுக்கு அதிகம் ஊக்கம் கொடுப்பவர். நான் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். இந்தியாவில் லாக்டவுன் வருவதற்கு முன்பு ஓடிடி தளங்கள் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால் லாக்டவுன் காலத்தின்போது ஒடிடி பிளாட்ஃபாம் வளர்ச்சி அடைந்துவிட்டதால் தற்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
ஆனால் வெளியாகும் படங்களின் விமர்சனங்கள் குறித்து தங்களது மொபைல் போன்களில் பார்த்து தியேட்டருக்கு போவதா வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிறிய படம் லவ்டுடே வெற்றி பெற்றது. பெரிய படமாக இருந்தாலும், சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் ரசனை, அந்த படத்தை நாம் எப்படி அனுகிறோம், மக்கள் எப்படி அந்த படத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே தியேட்டர்களுக்கு கூட்டம் வருகிறது. இதில் லவ்டுடே படத்தை ஆர்ஆர்ஆர் கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களுக்கு இணையாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
தியேட்டருக்கு மக்களை வரவழைக்க வேண்டும் என்றால் அவர்களின் மனதுக்கு ஒன்றிய படங்களை எடுக்க வேண்டும். அதேபோல் படங்களை பற்றி பெருமையாக நினைத்தால் தியேட்டருக்கு வருவார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை மக்கள் அனைவரும் தங்களது பெருமையாக கருதினார்கள். அதனால் தான் அந்த படத்திற்கு அவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தார்கள். பான் இந்தியா சிந்தனையில் எடுக்கப்பட்ட விக்ரம் படமும் வரவேற்பை பெற்றது.
மணிரத்னம் சார் இயக்கிய நாயகன் படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன். அதன்பிறகு பிஎச்எஸ் டேபிபில் வீட்டில் பார்த்தேன். இந்த படத்தை நான் 47 முறை பார்த்திருக்கிறேன். இதை பார்த்துதான் நான் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது நான் நினைத்தது நாயகன் மாதிரியான ஒரு படம் அல்லது நாயகனை விட சிறப்பான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 15 வயதில் நான் இந்த படத்தை பார்த்து இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைத்தேன்.
இன்றைய காலக்கட்டத்தில் 15 வயதில் இருக்கும் பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து அதேபோல் அல்லது அதை விட சிறப்பான ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். மணிரத்னம் சார் அன்றைக்கும் இன்றைக்குமு் இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் போல் தமிழ் சினிமா அல்லது இந்தியன் சினிமாவுக்கு ஒரு மணிரத்னம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.