அன்புவின் எழுச்சி எப்போது? வடசென்னை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

சிம்பு – வெற்றிமாறன் இணையும் படம் வட சென்னை படத்தின் 2-ம் பாகம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் வட சென்னை 2-ம் பாகத்தில் தனுஷ் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிம்பு – வெற்றிமாறன் இணையும் படம் வட சென்னை படத்தின் 2-ம் பாகம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் வட சென்னை 2-ம் பாகத்தில் தனுஷ் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Vetrimaran STR

வெற்றிமாறன் இயக்கத்தில்சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் கலக்கி வரும் நிலையில், இந்த படம் வட சென்னை படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும், பெரிய வெற்றிகளை குவித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு பொல்லாதவன் படம் தொடங்கி, ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை, விடுதலை 2 என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிப்பில் வாடி வாசல் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்திற்கான முன்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது, ஆனாலும், தாணுக்கு கொடுத்த வாக்கின்படி அவரது நிறுவனத்திற்கு வெற்றிமாறன் ஒரு படம் இயக்க உள்ளார் என்றும், அந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு ப்ரமோ ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், இந்த ப்ரமோ வரும் ஜூன் 25-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சிம்பு – வெற்றிமாறன் இணையும் படம் வட சென்னை படத்தின் 2-ம் பாகம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் வட சென்னை 2-ம் பாகத்தில் தனுஷ் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த கேள்விகளுக்கு தற்போது இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment
Advertisements

விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறனிடம், வட சென்னை 2 எப்போது, அன்புவின் எழுச்சியை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று பலரும் கேட்க, இந்த கேள்விக்கு அடுத்த வருடம் வட சென்னை 2 வரும் என்று தனுஷ் சொன்னதாகவும் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், வட சென்னை படத்திற்கு தாயரிப்பாளரும் ஹீரோவும் தனுஷ் தான். அவரே அடுத்த வருடம் வட சென்னை என்று சொல்லிவிட்டார். அடுத்த வருடம் பண்ணிடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், இப்போது தாணு சாரிடம் ஒரு படம் பண்ண போகிறேன். அடுத்து வேல்ஸ் நிறுவனத்துடன் நானும் தனுஷூம் இணைகிறோம் என்று வெற்றிமாறன் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். 

Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: