Nayanthara Vignesh Shivan Wedding Photo Gallery : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் இவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
Advertisment
நானும் ரவுடிதான் என்ற படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு திருமணத்தில் முடிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 9) சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இவர்ளின் திருமண நிகழ்வுகள் ஒடிடி தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரஙகாலமாக நடைபெற்று வந்த இந்த திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று முடிவடைந்தது.
இந்நிலையில், திருமணம் நடந்து கொண்டிருக்கும்போதே திருமணம் தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்திலும், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil