Advertisment

நட்ட நடு ரோட்டில்... நயன்தாராவுடன் இரவு உலா: மனைவிக்கு 'சாங்' டெடிகேட் செய்த விக்கி

விக்கி நயன் ஜோடி நடுத்தெருவில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்னர்.

author-image
WebDesk
New Update
Wikki Nayan

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி

தங்களது மகன்களின் பிறந்த நாளை முன்னிட்டு மலேசியா சுற்றுப்பயணம் சென்றுள்ள நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி நடு ரோட்டில் ரொமான்டிங்-காக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் குழந்தைகளுக்கு முதல் பிறந்த நாள் வந்தது. இந்த நாளை விக்கி நயன் ஜோடி விமர்சையாக கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலக பரவியது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுடன் மலேசிய சென்றுள்ள விக்கி நயன் தம்பதிக்கு அங்கு முருகன் கோவிலில் ஒரு தம்பதி குழந்தைகளின் ஓவியத்தை பரிசாக அளித்திருந்தது. இதனிடையெ தற்போது மலோசிய சாலைகளில் வலம் வரும் விக்கி நயன் ஜோடி நடுத்தெருவில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்னர். இந்த புகைப்படங்களில் விக்னேஷ் சிவன் தோள் மீது நயன்தாரா சாய்ந்துகொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்த காத்துவாகுல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை என்ற தமிழ் பாடலின் வரிகளுடன் தனது இன்ஷ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள விக்கி, "அவளோடிருக்கும் ஒரு வித நட்பினால் சிநேகிதன் ஆனேன் என்று பல சிவப்பு இதயங்கள் மற்றும் தீய கண் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளின் சந்தைகளில் புதிய தோல் பராமரிப்பு பிராண்டை அறிமுகம் செய்துள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த நயன்தாரா செல்ஃப்கேர் பிராண்டின் முகம் மற்றும் பயன்பாடு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அட்லி இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடி வசூல் செய்தது. விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் குரோவர், சஞ்சய் தத் ஆகியோரும் நடித்திருந்த இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment