தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களது குழந்தைகளின் பெயர்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமணம் மகாபலிபுரம் பகுதியில் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அடுத்து இவர்கள் சென்ற அனைத்து இடங்களில் இருந்து புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வெளிநாட்டில் ஹனிமூனை முடித்த இந்த ஜோடி அதன்பிறகு திரைப்படங்களில் பிஸியானார்.
இந்நிலையில், திருமணம் முடிந்து 5 மாதங்களில் (அக்டோபர் மாதம்) தங்கள் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஷாக்கான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த அவர்கள் தங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், தாங்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துகொண்டதாக கூறிய விக்கி நயன் தம்பதி அதற்கான ஆதாரத்தை கொடுத்தனர்.
அதன்பிறகு அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த இந்த ஜோடி, சமீபத்தில் மும்பை ஏர்போட்டில் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். இதனிடையே தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தங்களது கன்களின் பெயரை அறிவித்துள்ளனர். அதன்படி தங்களது மகன்களுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“