scorecardresearch

பிரஸ்மீட்டை பாதியில் நிறுத்திய விஜயகாந்த்… அதன்பிறகு சொன்ன வார்த்தை… இயக்குனர் விக்ரமன் ப்ளாஷ்பேக்

இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் நடிப்பில் வானத்தைபோல மரியாதை உள்ளிட்ட 2 படங்களை இயக்கியுள்ளார். இதில் வானத்தைபோல போல படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய சாதனை படைத்தது

பிரஸ்மீட்டை பாதியில் நிறுத்திய விஜயகாந்த்… அதன்பிறகு சொன்ன வார்த்தை… இயக்குனர் விக்ரமன் ப்ளாஷ்பேக்

எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் எனக்காக ப்ரஸ் மீட்டை பாதியில் நிறுத்திவிட்டு என்னை வரவேற்றார் என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு, சக நடிகர்கள் மீதான மரியாதை நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான முயற்சி உள்ளிட்ட ஏராளமான செயல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் மத்தியிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர் விஜயகாந்த்.

சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் என்றாலும் கூட, அதை பெரியதாக காட்டிக்கொள்ளாமல், சக நடிகர்களுக் ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக சென்று உதவி செய்பவர். மேலும் இந்தியாவில் எந்த மூலையில் பிரச்சினை என்றாலும் அதற்கு முதல் நன்கொடை கொடுப்பது விஜயகாந்த் தான் என்று நடிகர் சத்யராஜ் ஒரு மேடை பேச்சில் தெரிவித்திருந்தார்.

பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதை அவர் நடித்த காமெடி காட்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். அதேபோல எந்த நிலையில் இருந்தாலும், தன்னுடன் பழகியவர்களுக்காக எதையும் செய்யக்கூடிய தைரியம் உள்ளவர் விஜயகாந்த் என்று நக நடிகர்கள் பலரும் கூறியுள்ளனர்.

அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் குறித்து கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. நானும் எனது உதவியாளரும் ஒரு திருமணத்திற்காக சென்றிருந்தோம். அப்போது விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருந்தார். இதனால் திருமணம் முடிந்து வரும்போது அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றிருந்தோம்.

அப்போது விஜயகாந்த் வீட்டில் பெரிய பிரஸ் மீட் நடந்துகொண்டிருந்தது. அப்போது உள்ளே சென்ற என்னை பார்த்த விஜயகாந்த் பிரஸ்மீட்டை பாதியில் நிறுத்திவிட்டு வாங்க சார் என்று என்னை வரவேற்றார். அதன்பிறகு அவரது உதவியாளரை அழைத்து சாரை அழைத்துக்கொண்டு போய் என் ரூமில் உட்கார வை. அவர் சிகரெட் பிடிப்பார் அதனால் ஜன்னலை திறந்து வை என்று கூறினார். விஜயகாந்த் இப்படி நடந்துகொண்டது என் வாழ்நாளில் மறக்க முடியாது.

தான் எந்த நிலையில் இருந்தாலும் தன்னுடன் பழகியவர்களை மதிக்க தெரிந்த மனிதன் தான் விஜயகாந்த். ஆனால் அவரின் தற்போதைய நிலை மிகவும் வேதனையாக உள்ளது. அதனால் தான் நான் அவரை கடந்த 2 வருடங்களாக சந்திப்பதை தவிர்த்து வருகிறேன். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் புது வசந்தம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைபோல உள்ளிட்ட பெரிய வெற்றப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் நடிப்பில் வானத்தைபோல மரியாதை உள்ளிட்ட 2 படங்களை இயக்கியுள்ளார். இதில் வானத்தைபோல போல படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema director vikraman said about captain vijayakanth

Best of Express